வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பார்த்திபனை அவமானப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்.. 115-ன்னு சொன்னத மீடியா முன்னாடி காட்ட முடியுமா.?

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்திருந்த இரவின் நிழல் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் இதுவரை யாரும் எடுக்காத புது முயற்சியாக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டு வெளியானது. எப்போதுமே புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதே அளவுக்கு இப்படம் சில பல சர்ச்சைகளிலும் சிக்கியது. அதனாலேயே நொந்து போன பார்த்திபன் இனிமேல் அவார்ட் வாங்குவதற்காக படங்களை எடுக்க மாட்டேன் என்றும், கமர்சியல் படங்களை மட்டும் தான் எடுக்கப் போகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். ஏனென்றால் அவர் இதற்கு முன்பு இயக்கியிருந்த ஒத்த செருப்பு, சமீபத்தில் வெளியான இரவின் நிழல் போன்ற படங்களுக்கு நிச்சயம் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தார்.

Also read: அவார்டு, வசூல் என அள்ளி குவித்த இரவின் நிழல்.. ஆனாலும் சூடுபட்டு விட்டேன் என புலம்பிய பார்த்திபன்

ஆனால் அத்தகைய படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றதே தவிர பெரிய அளவில் அவார்டுகளை எல்லாம் வாங்கி குவிக்கவில்லை. அந்த விரக்தியில் தான் அவர் இப்போது இரவின் நிழல் 115 விருதுகளை வாங்கி குவித்திருந்தும் நிறைய சூடுபட்டு விட்டேன் என்று சர்வதேச திரைப்பட விழாவில் வருத்தத்துடன் கூறியிருந்தார்.

அவருடைய இந்த கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது அவர் உங்கள் 115 விருதுகளை மீடியா முன்பு காட்ட முடியுமா, அந்த விருதுகளை உங்களுக்கு யார் கொடுத்தார்கள் என்ற பட்டியல் உண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கோல்டன் குளோப், கேம்ஸ் படவிழா உள்ளிட்ட பிரசித்தி பெற்ற விழாக்களில் உங்கள் படம் ஒரு விருது கூட பெறவில்லை.

Also read: கடன் அடைக்க முடியாத நடிகை, தனியறையில் மானபங்கப்படுத்திய கொடூரம்.. உண்மையை படமாக்கிய பார்த்திபன்

நீங்கள் வாங்கிய அத்தனை விருதுகளும் அங்கீகாரம் இல்லாத உப்புமா நிறுவனங்களால் கொடுக்கப்பட்டது தான். அதை வைத்து மக்களை நீங்கள் முட்டாள் ஆக்காதீர்கள் என்று பார்த்திபனை அவமானப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த கமெண்ட்டுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கஷ்டப்பட்டு ஒருவர் படத்தை எடுத்தால் இப்படித்தான் கேலி செய்து அவமானப்படுத்துவீர்களா என்று புளூ சட்டை மாறனை திட்டி வருகின்றனர். அந்த வகையில் பார்த்திபன் இனிமேலாவது அவார்ட்டுக்காக படம் எடுக்காமல் மக்களின் ரசனையை புரிந்து கொண்டு நல்ல தரமான கதைகளை கொடுத்தால் நிச்சயம் விருதுகள் அவரைத் தேடி வரும். இதைத்தான் ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also read: நடிகைகளால் வந்த பிரச்சனை.. இலவசமாக வந்த விளம்பரத்தால் கலக்கத்தில் பார்த்திபன்

Trending News