புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தரமான 5 கோடிஸ்வர நடிகர்கள்.. நடிப்பெல்லாம் அப்புறம்தான்! எங்களுக்கு இதான் முக்கியமே

முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க வந்ததற்கு பின்புதான் அவர்கள் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் பிஸ்னஸ் செய்துவிட்டு அதை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடிக்க வந்து சில படங்களிலேயே ரசிகர்களை ஈர்த்தவர்கள். அப்படிப்பட்ட 5 பிஸ்னஸ்மேன் நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

சரவணன் அண்ணாச்சி : பெஸ்ட், பெஸ்ட் என்று தனது சொந்த ஜவுளி கடையான சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தானே நடித்து விளம்பர சாம்ராஜ்யத்திற்கு புதுவிதமான விளம்பரங்களை அள்ளித் தந்தவர்தான் நடிகர் சரவணன். சரி விளம்பரத்தில் தான் நடிக்கிறார் என்று பார்த்தால், திடீரென தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தை தானே தயாரித்து படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றியையும் கொடுத்துள்ளார். தற்போது தி லெஜெண்ட் சரவணன் தயாரிப்பு மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க களமிறங்கியுள்ளார்.

Also Read: கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் மிரட்டுய 5 நடிகர்கள்..

ஆர்கே சுரேஷ்: தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், வில்லன் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியவர் தான் தயாரிப்பாளர், நடிகர் ஆர். கே சுரேஷ். ஸ்டுடியோ 9 என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆர் கே சுரேஷ், விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், தர்மதுரை உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வந்தார். அதன் பின்னர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக களம் இறங்கிய ஆர்.கே.சுரேஷ் இத்திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஆர்.கே: ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் ஆர்.கே ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருபவர். தமிழில் வெளியான எல்லாம் அவன் செயல் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து இயக்குனர் பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.மேலும் விஜயின் ஜில்லா, விஷாலின் பாயும்புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ரியல் எஸ்டேட் பிசினஸில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள ஆர்.கே தற்போது சினிமாவில் நடிப்பதை சிலவருடங்கள் நிறுத்தியுள்ளார்.

Also Read: ஆக்டிங் ஸ்கூலில் ரஜினியுடன் சேர்ந்து படித்த 5 நடிகர்கள்..

பவர் ஸ்டார்: கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானார் பவர் ஸ்டார் சீனிவாசன். இத்திரைப்படம் ரிலீஸான சில நாட்களிலேயே இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், பைனான்ஸ் கம்பெனி ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். மேலும் மருத்துவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் வசந்த்: வசந்த் அண் கோ நிறுவனரான மறைந்த வசந்த் அவர்களின் மகனான விஜய் வசந்த் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்பு சிறு சிறு வேடங்களில் பல படங்களில் நடித்து வந்த விஜய் வசந்த், தந்தையின் மறைவிற்குப் பின் வசந்த் அன் கோ நிறுவனத்தை அவரை ஏற்று நடத்தி வருகிறார்.தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆகவும் உள்ளார்.

Also Read: குண்டாகி அவமானப்பட்ட 5 நடிகர்கள்.. தன்னைத்தானே செதுக்கிய அட்மேன் சிம்பு

Trending News