புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மோசமான கதையால் சல்லி சல்லியாய் நொறுக்கிய பார்ட்-2 படங்கள்.. தெருவுக்கு வந்த 5 தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் சமீபத்திய காலங்களாக பார்ட் 2 படங்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே செம ஹிட்டான ஒரு சில படங்களை எடுத்து பார்ட் 2 படங்களை உருவாக்கி அதை படுதோல்வி அடைய வைத்த இயக்குனர்கள் ஏராளம். அப்படி பார்ட் 1 சூப்பர்ஹிட் படங்களை வைத்து பார்ட் 2 ஹிட்டான 5 படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

களவாணி 2: 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான களவாணி திரைப்படம் காதல், காமெடி என சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் நடிகை ஓவியா, விமல் அப்படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் பெரிய வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் இவர்கள் இருவரின் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு களவாணி 2 படம் வெளியானது. இப்படத்தில் அரசியல்,காமெடி என பல காட்சிகள் இருந்த நிலையில், படத்தில் ஒரு காட்சிக்கூட சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.

Also Read: தலைக் கனத்தால் அழிந்த கொண்டிருக்கும் 6 ஹீரோக்கள்.. சீட்டிங் கேசில் டேமேஜ் ஆன விமல்

சாமி 2: இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு திரிஷா, விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சாமி திரைப்படம் இன்று வரை பலரது விருப்பமான படமாகும். இதனிடையே சாமி 2 படத்தை இயக்குனர் ஹரி 2018 ஆம் ஆண்டு இயக்கியிருந்தார். சாமி படத்தின் தொடர்ச்சிக் கதையாக உருவான இப்படம் நடிகர் விக்ரமின் கேரியரையே இழுத்து மூடவைத்தது.

வெண்ணிலா கபடி குழு 2: இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், சரண்யா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் அந்த ஆண்டில் சக்கைபோடு போட்டது. கபடி, காதல், சூரியின் பரோட்டா காமெடி என அனைத்தும் படத்தில் மாஸாக அமைந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வ சேகரன் இயக்கத்தில் வெளியான பார்ட் 2 திரைப்படத்தில் விக்ராந்த் நடித்திருப்பார். படத்தில் கபடி என்ற கதையே கிளிமாஸ் காட்சியில் மட்டுமே காணப்பட்டிருக்கும் நிலையில் படம் அட்டு பிளாப்பானது.

Also Read: உயிரை காப்பாற்ற கெஞ்சிய மனைவி.. இறந்த பிறகு தற்பெருமை பேசி விளம்பரம் தேடும் விஷ்ணு விஷால்

நீயா 2: 1979 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன், ஸ்ரீ ப்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நீயா திரைப்படம் திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியாகி செம ஹிட்டானது. இப்படத்தின் கதையை போன்றே 2019 ஆம் ஆண்டு இயக்குனர் எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய், லட்சுமி ராய், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இப்படத்தில் திகில் இருந்ததோ, இல்லையோ, கவர்ச்சிக்காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது, படத்தின் பெயருக்கேத்த கதை சுத்தமாக இல்லாததையடுத்து இப்படம் படுதோல்வி அடைந்தது.

சார்லி சாப்ளின் 2: 2002 ஆம் ஆண்டு பிரபு, பிரபுதேவா, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் திரைப்படம் காமெடியில் கலைக்கட்டி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தின் பார்ட் 2 வை, 2019 ஆம் சக்தி சிதம்பரம் இயக்கிருந்தார். இந்த படத்தில் பிரபுதேவா,பிரபு நீக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்திருப்பர். படத்தில் காமெடி எதுவும் பெரிதாக ஒர்கவுட் ஆகாத நிலையில், படம் வசூல் ரீதியாக கூட தோல்வியடைந்தது.

Also Read: நக்மாவை நடுரோட்டில் கழட்டிவிட்ட பிரபுதேவா.. மறுவாழ்வு கொடுத்த இயக்குனர்

Trending News