ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நல்ல அழகு இருந்தும் ஜொலிக்க முடியாமல் போன 5 நடிகர்கள்.. காசு வேண்டாம் வாய்ப்பு தாங்க என கதறிய ஷ்யாம்

நடிகர்களில் சிலர் நல்ல திறமை இருந்தும், நல்ல பெர்சனாலிட்டி இருந்தும் சினிமாவில் இன்றுவரை ஜெயிக்க முடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது ஏதாவது ஒரு வெற்றிப்படங்கள் கொடுத்தாலும் கோலிவுட்டில் ஒரு நல்ல அடையாளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சிலர் சினிமாவுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருந்தாலும் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை.

ஷ்யாம்: ஷ்யாம் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர். முதன் முதலில் ஹீரோவாக இயக்குனர் ஹரி இயக்கிய ஏய் நீ ரொம்ப அழகா இருக்க திரைப்படத்தின் மூலம் ஹீரோ ஆனார். லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கான அடையாளம் இன்றுவரை கிடைக்கவில்லை.

Also Read: தொப்பையும் தொந்தியும் ஆக மாறிய சாக்லேட் ஸ்டார் ஷியாம்.. சூதாட்டத்தில் நல்லா கல்லா கட்டிருச்சு போல!

ஸ்ரீகாந்த்: ஸ்ரீகாந்த் இயக்குனர் பாலசந்தரின் இயக்கத்தில் சீரியல்களில் நடித்தார். 2002 ஆம் ஆண்டு ரிலீசான ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் ஹீரோ ஆனார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியில் ஸ்ரீராம் என்ற பெயரில் அறியப்படுகிறார். ஆரம்ப காலத்தில் பல வெற்றி படங்கள் கொடுத்தாலும் இப்போது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இவருக்கு படவாய்ப்புகள் இல்லை.

ஹரிஷ் கல்யாண்: ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற படங்களில் நடித்தாலும் அந்த அளவுக்கு ஹீரோவாக வளரவில்லை. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்கள் கொடுத்தாலும் இப்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லை.

Also Read: 2022ல் காணாமல் போன 5 ஹீரோக்கள்.. 6 படம் கையில் இருந்தும் பரிதவிக்கும் விஜய் ஆண்டனி

கௌதம் கார்த்திக்: கௌதம் கார்த்திக்குக்கு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக முதல் படமே இயக்குனர் மணிரத்தினத்தின் படமாக அமைந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து படங்கள் இவர் நடித்தாலும் எந்த படமும் வெற்றியடையவில்லை. ஒரு ஹீரோவுக்கான எல்லா பெர்சனாலிட்டிகளும் இருந்தாலும் இவருக்கு இன்றுவரை கோலிவுட்டில் எந்த அடையாளமும் கிடைக்கவில்லை.

பிரசன்னா: 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சுசி இயக்கத்தில் வெளியான பைவ் ஸ்டார் படத்தின் மூலம் பிரசன்னா கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். அழகிய தீயே, கண்ட நாள் முதல், அஞ்சாதே, நாணயம், கோவா போன்ற படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை.

Also Read: தளபதி வேண்டாம், பிக் பாஸ் நடிகர் போதும்.. திருமணத்திற்க்கு பின் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்த ஜாக்பாட்

Trending News