ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அரை டஜன் பொண்டாட்டி, ஒரு டஜன் பிள்ளைகள்.. ராஜ வாழ்க்கை வாழ்ந்த எம்ஜிஆர் பட முரட்டு வில்லன்

60, 70-களில் தமிழ் சினிமாவை கலக்கிய எம்ஜிஆர் சுமார் 136 படங்களுக்கு மேல் நடித்து அசத்தினார். இவருடைய நிறைய படங்களில் இவருக்கு படா முரட்டு வில்லனாக நடித்த பிரபலத்தை பற்றி ஆச்சரியப்படுத்திய செய்தி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.

முதலில் நாடகத் துறையில் கொடி கட்டி பறந்த காலகட்டத்தில் இவரை வைத்து நாடகங்களை தயாரித்து வெளியிட்டனர். அதன் பிறகு 1942 வரை சந்தனதேவன், பம்பாய் மெயில் போன்ற படங்களை வரிசையாக நடித்தார்.

Also Read: எம்ஜிஆர் தன் பாணியில் நடிக்காத ஒரே படம்.. வித்தியாசமான கோணத்தில் தலைவரை நடிக்க வைத்த ஏவிஎம்

இப்படி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வகுத்த நடிகர் எம் ஆர் ராதா சொந்த வாழ்க்கையில் மன்மதனாகவே வாழ்ந்திருக்கிறார். இவருக்கு அரை டஜன் பொண்டாட்டிகளும், ஒரு டஜன் பிள்ளைகளும் இருந்திருக்கிறது. அந்த அளவிற்கு ராஜ வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் எம் ஆர் ராதா.

அதுமட்டுமல்ல இவர் நடித்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிஎஸ் ஞானம் என்பவரையும் கடத்தி கொண்டு போய் காதல் திருமணம் செய்து துணிந்தவர். இப்படி சினிமாவில் நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும் பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிறகு அரசியலிலும் தலை காட்டினார் எம் ஆர் ராதா.

Also Read: அதிக வசூலை வாரி குவித்த எம்ஜிஆரின் முதல் படம்.. 70-களிலேயே வேட்டையாடிய கலெக்ஷன்

இவருக்கு சரஸ்வதி, தனலட்சுமி, பிரேமாவதி, ஜெயம்மாள், பேபி அம்மாள் ஆகிய மனைவிகளுக்கு பிறகு இலங்கைக்கு சென்ற கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்தவர்கள் தான் ராதிகா மற்றும் நிரோஷா.

மேலும் எம்ஆர் ராதாவிற்கு எம்.ஆர்.ஆர். வாசு, ராதாரவி, ராணி என்ற ரஷ்யா, செல்வராணி, ரதிகலா, மோகன் ராதா போன்ற பிள்ளைகளும் இருந்தனர். இவர்களுள் எம்.ஆர்.ஆர். வாசு, ராதாரவி, ராதிகா, நிரோஷா ஆகியோர் திரைப்படங்களில் நடித்துள்ளனர். மோகன் ராதா தயாரிப்பாளராக சினிமாவிற்கு பரீட்சையமானவர்.

Also Read: 6 உச்ச நட்சத்திரங்களூடன் நடித்த ஒரே நடிகை.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோக்கள் விட்ட ஜொள்ளு

Trending News