வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய விக்கி-நயன் ஜோடி.. மீடியா முன் கிழித்தெறிந்த ஜிபி முத்து

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் தான் ஜிபி முத்து. ஆரம்பத்தில் பல நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே இவர் பெற்று வந்தார். நாளடைவில் இவருடைய திருநெல்வேலி வட்டார பாஷையின் மூலம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தார். நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டராக இவர் இருக்கிறார். உண்மையை சொல்ல போனால் ஜிபி முத்து யாருக்கு ஓட்டு போட சொல்கிறாரோ அவருக்கு தான் ஓட்டு போடுவார்கள் போல அவருடைய ரசிகர்கள். இப்படி பட்டிதொட்டியெங்கும் இவருடைய புகழ் பரவி கிடக்கிறது. பல சினிமா பிரபலங்கள் இவரை தேடி வந்து பேசியிருக்கின்றனர்.

Also Read: சொந்த படம் என்றதும் தீயாய் வேலை செய்யும் நயன்தாரா.. ரிலீசுக்கு முன்பே 3 மடங்கு லாபம் பார்த்த கனெக்ட்

சமீபத்தில் லவ் டுடே பட இயக்குனர் பிரதீப், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் அவர்களுடைய பட ப்ரொமோஷனுக்காக ஜிபி முத்துவை சந்தித்து பேசியிருக்கின்றனர். அந்த அளவுக்கு பிரபலமாகியிருக்கிறார் ஜிபி முத்து. அதுபோல இவர் இப்போது பல படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் அஜித்தின் 62 வது படத்தில் கூட ஜிபி முத்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதற்கிடையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா தனி கதாநாயகியாக நடிக்கும் கனெக்ட் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். தன்னுடைய சொந்த தயாரிப்பு என்பதால் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பட ப்ரோமோஷனில் தீவிரமாக இறங்கி விட்டனர்.

Also Read: மீண்டும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆக வரும் நயன்தாரா.. ப்ரீமியர் ஷோ படம் எப்படி இருக்கு.? விமர்சனம்

சோசியல் மீடியா பிரபலங்களை அழைத்து கனெக்ட் திரைப்படம் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டு இருக்கிறது. இந்த ஷோவுக்கு ஜிபி முத்துவை அழைத்த விக்கி-நயன், நயன்தாரா பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஜிபி முத்துவை எங்கோ ஒரு மூலையில் உட்கார வைத்து விட்டார்களாம். பௌன்சர்கள் நயன்தாரா பக்கத்தில் கூட அவரை விடவில்லையாம்.

இந்த நிகழ்வை சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜிபி முத்து சொல்லியிருக்கிறார். நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்றும், இதனால் பாதி படத்திலேயே எழுந்து வெளியே வந்துவிட்டதாகவும் அவர் மொத்த மீடியா முன்னும் உண்மையை போட்டு உடைத்துவிட்டார். இதற்கு விக்னேஷ் சிவன் பதில் சொல்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: அடுத்தடுத்து பிளாப்பாகும் படங்கள்.. கல்லா கட்ட நயன்தாரா போட்டிருக்கும் திட்டம்

Trending News