ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதை கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். ஆனால் சில இயக்குநர்கள் ஒரே மாதிரியான கதையை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். அரைத்த மாவையே அரைப்பதால் ரசிகர்களுக்கு புளித்து போய்விடுகிறது. அவ்வாறு ஒரே கதை களத்துடன் படத்தை எடுக்கும் 5 இயக்குனர்களை பார்க்கலாம்.
முத்தையா : கிராமத்து கதை அம்சம் கொண்ட படங்களை மட்டுமே இயக்கி வருகிறார் இயக்குனர் முத்தையா. ஆரம்பத்தில் இவர் இயக்கிய கொம்பன், மருது ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும் அதன் பின்பு ஒரே மாதிரியாக இவரது படங்கள் இருப்பதினால் ரசிகர்களுக்கு சற்று அலுப்பு தட்டி உள்ளது.
ராஜேஷ் : சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் இயக்குனர் ஆன ராஜேஷ் தொடர்ந்து காமெடி படங்களையே இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது. அதன்பின்பும் ஒரே கதையை உருட்டி வந்ததால் சில வருடங்களிலேயே சினிமாவில் காணாமல் போய் உள்ளார்.
பேரரசு : தளபதி விஜய்க்கு திருப்பாச்சி, சிவகாசி என்று சூப்பர் ஹிட் படங்களை பேரரசு கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாமே ஊர் பெயரை வைத்திருப்பார். மேலும் அதிரடி வசனங்களுடன் மசாலா படங்களை தொடர்ந்து எடுத்து வந்ததால் நாளடைவில் இவரது படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.
ராகவா லாரன்ஸ் : பன்முகத்தன்மை கொண்ட லாரன்ஸ் இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார். அந்த வகையில் முனி, காஞ்சனா என பேய் படங்கள் இயக்கியுள்ளார். இந்த இரு படங்களுக்கும் கிடைத்த ஆதரவு அதன் பிறகு லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான படங்களுக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் ஒரே மாதிரியாக அரைச்ச மாவையே அரைத்து வருகிறார்.
பொன்ராம் : ஆரம்பத்தில் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய பொன்ராம். சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் எல்லாமே காமெடி கதையில் எடுக்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் பேச்சைக் கேட்டு இவர் இது போன்ற படங்களை எடுத்ததால் வாழ்க்கையை தொலைத்துள்ளார்.