செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நயன்தாராவுடன் கூட்டணி போடும் லோகேஷ்.. பணத்தாசை யாரை விட்டுச்சு, எதிர்பார்க்காத புது அவதாரம்

நயன்தாரா நடிப்பில் இன்று கனெக்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் கவனம் செலுத்த இருக்கிறார். தற்போது ஷாருக்கானுடன் ஜவான் மற்றும் இரண்டு தமிழ் படங்களில் கமிட்டாகி இருக்கும் நயன்தாரா அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க இருக்கிறார்.

தற்போது லோகேஷ் விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதுவே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் லோகேஷ் புதிதாக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்போது இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் தயாரிப்பு பக்கம் திரும்பி உள்ளனர்.

Also read: உச்சகட்ட பயத்தை காட்டிய நயன்தாராவின் கனெக்ட்.. கல்லா கட்ட வாய்ப்பு இருக்கா.? திரைவிமர்சனம்

அந்த வகையில் லோகேஷ் தற்போது ஹாரர் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறாராம். லோகேஷ் என்றாலே ஆக்சன் தான் என்று சொல்லும் அளவுக்கு இவர் தன்னுடைய திரைப்படங்களில் அதிரடியான சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். கைதி, மாஸ்டர், விக்ரம் என அவருடைய படங்கள் அனைத்துமே அனல் பறக்கும் ஆக்சன் படங்கள் தான்.

அப்படி இருக்கும்போது இவர் முதல் முதலாக தயாரிக்கும் திரைப்படத்தை திகில் கலந்த திரில்லர் படமாக கொடுக்க இருக்கிறார். அப்படத்தை மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்குகிறார். மேலும் நயன்தாராவுடன் இணைந்து முதல் முறையாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். கடந்த சில வருடங்களாக அவர் காஞ்சனா, சிவலிங்கா உட்பட திகில் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

Also read: மாயா பட எதிர்பார்ப்பை நயன்தாராவின் கனெக்ட் பூர்த்தி செய்ததா.? பயமுறுத்தும் ட்விட்டர் விமர்சனம்

அதைத்தொடர்ந்து இப்போது சந்திரமுகி 2 திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் இணைந்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத இந்த கூட்டணி தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நயன்தாராவும் இப்போது இது போன்ற சஸ்பென்ஸ் படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இப்போது வெளியாகி இருக்கும் கனெக்ட் திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. மேலும் நயன்தாரா மற்றும் லோகேஷ் இருவரின் மார்க்கெட்டும் உச்சத்தில் இருக்கிறது. அதனாலேயே இவர்களின் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் தயாரிப்பாளரான லோகேஷுக்கும் பல மடங்கு லாபம் கிடைக்கும். அதை எதிர்பார்த்து தான் அவர் இப்போது தயாரிப்பில் குதித்துள்ளதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

Also read: நயன்தாராவை நக்கல் செய்த நடிக்க தெரியாத நடிகை.. அசிங்கப்படுத்திய லேடி சூப்பர் ஸ்டார்.!

Trending News