தளபதியுடன் ஜோடி போட்டும் செல்லுபடி ஆகல.. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிளாப்

கோலிவுட்டில் உச்ச நாயகனாக இருக்கும் தளபதி விஜய்க்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம். இதனால் அவருடன் ஜோடி போடும் கதாநாயகங்களையும் தளபதி ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடுவார்கள். ஆனால் விஜய்யுடன் இணைந்து நடித்தும் பிரபல நடிகைக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.

இவர் ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்பு ஜீவாவுடன் முகமூடி என்ற படத்தில் நடித்தவர் தான் பூஜா ஹெக்டே. இவர் 2019 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற பின் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். இருப்பினும் முதலில் முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹிட்டே அதன்பிறகு 10 வருடங்கள் கழித்து 2022 ஆம் ஆண்டு விஜய் உடன் பீஸ்ட் படத்தில் ஜோடி போட்டார்.

இருப்பினும் அந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று பெரிதாக ஒன்றும் ஹிட் கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட காதல் காவியம் என்று இந்தியாவின் டைட்டானிக் என பில்டப் விட்ட படம் தான் ராதே ஷ்யாம்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டேவிற்கும் பிரபாஸுக்கும் கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை என சோசியல் மீடியாவில் கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனால் இந்த படம் பூஜா ஹெக்டேவுக்கு மட்டுமல்ல பிரபாஸுக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்த படமாக மாறியது

இதுமட்டுமின்றி இந்த ஆண்டு கடைசி படமாக இன்று வெளியான சர்க்கஸ் படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியதுடன், ரிலீஸ் ஆன முதல் நாளே தியேட்டர் எம்டி ஆனதுடன் இந்தப் படத்தை குறித்து நெகட்டிவ் கமெண்ட்கள் சோசியல் மீடியாவில் குவிகிறது.

இதில் ரன்வீர் சிங் உடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்திருந்தார். இப்படி ரசிகர்களால் கால் அழகி என வர்ணிக்கப்பட்ட பூஜா ஹெக்டே, இந்த வருடம் கால் வைத்த இடமெல்லாம் அவருக்கு கன்னிவெடியாக மாறியது. ஆகையால் பூஜா ஹெக்டே இந்த வருடத்தின் ‘டிசாஸ்டர் ஹீரோயின்’ என்று இவருக்கு நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் முத்திரை குத்தி விட்டனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →