வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பஸ்சுக்கு கூட காசு இல்லாமல் அலைந்த நடிகை.. இன்று சொந்த விமானத்தில் பறக்கும் அதிர்ஷ்டம்

சினிமா ஒருவரை ஓவர் நைட்டில் உச்சாணி கொம்பில் ஏற்றிவிடும். அதேபோன்று நடுத்தெருவில் கூட நிறுத்தி விடும். அப்படி பஸ்சுக்கு கூட காசு இல்லாமல் அலைந்த ஒரு பெண்ணுக்கு சினிமா அதிர்ஷ்டத்தை வாரி இறைத்திருக்கிறது. வயிற்று பிழைப்புக்காக சிறு சிறு வேலைகளை பார்த்து வந்த ஒரு நடிகை இப்போது கோடிகளில் புரளுகிறார்.

ஆரம்பத்தில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகைக்கு திடீரென டாப் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக தொடங்கிய நடிகை அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகை கெத்து குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also read: பெரிய பணக்காரரை வளைத்து போட்ட விஜய் டிவியின் முக்கிய பிரபலம்.. சத்தமில்லாமல் செய்யப்போகும் 2வது திருமணம்

பல வருடங்களாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அவருக்கு எப்போதுமே லைம் லைட்டில் ஜொலிக்க வேண்டும் என்ற அளவுக்கு அதிகமான ஆசை உண்டு. அதனாலேயே அந்த நடிகை தன்னை பற்றிய சர்ச்சைகளை வேண்டுமென்றே கிளப்பி விடுவார்.

அதுவும் சாதாரண சர்ச்சைகளாக இருக்காது. ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைக்கும் அளவுக்கு பெரிய குண்டைதான் அந்த நடிகை தூக்கி போடுவார். அது சில நாட்களுக்கு பற்றி எரியும். அது நடிகைக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்குமாம். இப்படி தன்னை புகழ் வெளிச்சத்தில் வைத்துக்கொள்ள அந்த நடிகை என்ன வேண்டுமானாலும் செய்வார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also read: 15 வயதில் திருமணம், பலான படத்தில் நடிக்க வற்புறுத்திய கணவன்.. விரக்தியில் 17 வயதில் மரணமடைந்த நடிகை

தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை அதையெல்லாம் பக்காவாக முதலீடு செய்து வருகிறார். ஆரம்ப காலத்தில் பணத்துக்காக கஷ்டப்பட்டு வந்த நடிகை இன்று தனி விமானம் மூலம் பயணம் செய்யும் அளவுக்கு அதிர்ஷ்ட தேவதையாக மாறி இருக்கிறார். அந்த அதிர்ஷ்டம் தன்னை விட்டு போக கூடாது என்பதற்காகத்தான் அவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகைக்கு இந்த வருடம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அடுத்தடுத்த தோல்விகளால் அவருடைய மார்க்கெட் ஆட்டம் காணும் அளவுக்கு இருக்கிறது. அதனால் நடிகை தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ள தற்பொழுது புது பிளான் போட்டு வருகிறாராம். கூடிய விரைவில் நடிகை அடுத்த சர்ச்சையை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்துவார் என்று பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

Also read: அர்ஜுனின் முதல் படமே இறுதியான பரிதாபம்.. 24 நாள் கோமாவில் இருந்து உயிரிழந்த 19 வயது நடிகை

Trending News