வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாலச்சந்தர் 4 பேரும் கொடுத்த மோசமான பிளாப் படம்.. யானைக்கும் அடிசறுக்கும்

80களில் அசைக்க முடியாத இயக்குனர்களாக கருதப்பட்ட பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற 4 இயக்குனர்களும் எவ்வளவோ ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், இவர்கள் கொடுத்த 4 மோசமான பிளாப் படங்களை பற்றி பார்ப்போம்.

பாலுமகேந்திரா: 80-களில் தமிழ் சினிமாவின் பல வெற்றி படங்களை இயக்கி பெயர்ப்பன பாலுமகேந்திரா, 2001 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்ட என் இனிய பொன் நிலாவே என்ற திரைப்படம், இதுவரை அவர் கொடுத்த படங்களில் மோசமான பிளாப் கொடுத்த படம் என்ற பெயரை வாங்கியது. இந்தப் படத்தில் மோனிகா, பாண்டியராஜன், விசித்ரா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இளையராஜா மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த இந்தப் படம், எதிர்பார்த்த அளவு திரையரங்கில் ஓடாமல் போனது.

Also Read: பாலுமகேந்திரா உட்பட 2 பெரிய ஜீனியஸ் இயக்கத்தில் நடித்த ஒரே நடிகர்.. இனிமேல் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு

மகேந்திரன்: தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த மகேந்திரன் 1992 ஆம் ஆண்டு எழுதி இயக்கிய ஊர் பஞ்சாயத்து என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் பாண்டியராஜன், மகாலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு எஸ்பி பாலசுப்ரமணியம் இசையமைத்திருப்பார். பல வெற்றிகளை தந்த மகேந்திரனுக்கு இந்த படம் அவருடைய கேரியரின் பிளாக் படமாக மாறியது.

பாரதிராஜா: கிராமத்து மண் கமலும் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் பாரதிராஜா எண்பதுகளில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் இயக்குனர் இமயம் என்றும் போற்றப்படுவார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான வாலிபமே வா வா என்ற படம் இவருக்கு படு தோல்வியை தந்த படமாக அமைந்தது. இதில் நவரச நாயகன் கார்த்திக், ராதா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருப்பார்.

Also Read: கமலின் சூப்பர் ஹிட் படத்தை இயக்க மறுத்த பாலச்சந்தர்.. பிரிவியூ ஷோ பார்த்துட்டு இளையராஜா விட்ட சபதம்

கே பாலச்சந்தர்: 1965 ஆம் ஆண்டு நீர்க்குமிழி படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகவே மாறினார். இவருடைய படங்களில் பெரும்பாலும் மனித உறவு முறைக்கு இடையேயான சிக்கல், சமூக பிரச்சினைகள் ஆகியவற்றையே கருப்பொருளாக கொண்டு ரசிகர்களை வெகுவாக இருப்பார்.

இப்படி கோலிவுட்டில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த டாப் இயக்குனரான இவர், 2001 ஆம் ஆண்டு இயக்கிய பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படம் இவருக்கு படு தோல்வியை தந்தது. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து, படத்தில் மாதவன், சிம்ரன், ராகவா லாரன்ஸ், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இருப்பினும் இந்த படம் பல வெற்றிகளை கண்ட கே பாலச்சந்தருக்கு தோல்வியாக மாறியது.

Also Read: கே பாலச்சந்தர் பட்டையை கிளப்பிய 5 படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரஜினி

இவ்வாறு இந்த 4 இயக்குனர்களும் தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்த டாப் இயக்குனர்கள் ஆவார்கள். அவர்களது இயக்கத்தில் வெளியான படங்களும் பிளாப் ஆனது என்பதை பார்த்தால் ‘யானைக்கு அடி சறுக்கும்’ என்பது 100 சதவீதம் உண்மையானது.

Trending News