தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக விளங்கும் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், விஜய் போலவே வெள்ளித்திரையில் அவருடன் இணைந்து நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வர நினைத்தார். ஆனால் அது செல்லுபடி ஆகாததால் பிறகு வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்தார் சஞ்சீவ்.
இவர் 6 வருடங்களாக சின்ன திரையில் ஓடி மெகா ஹிட் கொடுத்த திருமதி செல்வம், மெட்டிஒலி, ஆனந்தம், அவள் யாரடி நீ மோகினி, கண்மணி போன்ற சீரியல்களில் கதாநாயகனாக நடித்து இதுவரை 17 வருடங்களாக சின்னத்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இருப்பினும் அவருடைய கனவு வெள்ளித்திரையில் டாப் ஹீரோவாக மாற வேண்டும் என்பதுதான். அதன்பின் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இருப்பினும் இவரால் சினிமாவில் எதிர்பார்த்த அளவு வளர முடியாததால் தற்போது பக்கா பிளான் போட்டு தன்னுடைய இரண்டு மகள்களையும் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாற்றி இருக்கிறார்.
செம க்யூட்டாக இருக்கும் இவர்களுடைய இரண்டு மகள்கள் விரைவில் படங்களில் கதாநாயகியாக என்று கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகையால் சஞ்சீவ் விட்டதை அவர்களுடைய மகள்கள் ஹீரோயின்களாக மாறி சாதிக்க நினைக்கிறார்கள். இப்போது சஞ்சீவ் தனது இரண்டு மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
ஹீரோயின்களாக மாற துடிக்கும் சஞ்சீவ் மகள்கள்
