அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் நடிகை ஒருவர். ஒரு நடிகை சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அவர் எல்லாவற்றிற்கும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி சினிமாவில் இருக்கிறது. இதனாலேயே திறமை இருந்தும் சில நடிகைகள் காணாமல் போய்விடுகின்றனர்.
அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகை ஒருவருக்கு பெரிய இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று இயக்குனர் கண்டிஷன் போட்டிருக்கிறார். இதில் எல்லாம் விருப்பம் இல்லாத அந்த நடிகை முடியாது என்று மறுத்திருக்கிறார்.
இதனால் கடுப்பான அந்த இயக்குனர் சம்பந்தப்பட்ட நடிகையிடம் உன்னை விட அழகான எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் பணத்திற்காக பலான வேலை செய்யும் அழகான பெண்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஹீரோயின் மெட்டீரியலில் இருக்கும் நிறைய பெண்கள் உள்ளனர்.
அவர்களில் ஒருவரை என் படத்தில் நடிக்க வைத்தால் அவர்களுக்கு எதிர்பார்த்ததை விட பல மடங்கு பணமும் கிடைக்கும் மற்றும் புகழ், கேரியர் என்று அனைத்தும் கிடைக்கும் என கேவலமாக பேசி இருக்கிறார். இதைக் கேட்ட அந்த நடிகை வாய்ப்பு வேண்டாம் என்று மறுத்துவிட்டு திரும்பி இருக்கிறார்.
அந்த நடிகை மட்டுமல்ல அவர் போல எத்தனையோ திறமையான நடிகை இது போன்ற டார்ச்சர்களால் வாய்ப்பை இழக்கின்றனர். அந்த வகையில் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் அந்த நடிகை திறமை இருந்தும் இன்னும் முன்னணி அந்தஸ்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.