தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்விகளை சந்தித்து தான் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். அந்த வகையில் அவர் பல தோல்விகளை கொடுத்து துவண்டு போயிருந்த நேரத்தில் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய பல திரைப்படங்கள் இருக்கிறது.
அதன் மூலம் தான் அவர் வெற்றி நடிகராக மாறினார். அதற்கு மூன்று இயக்குனர்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றனர். ஆனால் இப்போது சூர்யா அந்த இயக்குனர்கள் படத்தில் நடிக்காமல் டீலில் விட்டிருக்கிறார். அந்த இயக்குனர்கள் பற்றியும் என்ன படங்கள் என்பது பற்றியும் இங்கு காண்போம்.
Also read: பணத்தாசையால் மொத்தத்தையும் இழந்த காமெடி நடிகர்.. அமீர், பாலாவால் கிடைத்த வாழ்க்கையை பறிகொடுத்த சோகம்
பாலா சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் நந்தா. அந்த படத்தில் நடித்த பிறகுதான் அவர் பலராலும் கவனிக்கப்பட்டார். அந்த படத்திற்கு பிறகு அவர் மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
அதனாலேயே பாலா மீது சூர்யாவுக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது. அப்படி ஒரு காரணத்தினால் தான் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பாலாவுக்கு வணங்கான் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை சூர்யா கொடுத்தார். ஆனால் பாலாவின் நடவடிக்கையின் காரணமாக இந்த படம் இப்போது பாதியிலேயே நின்று போய்விட்டது. இதனால் தயாரிப்பாளரான சூர்யாவுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also read: சுய லாபத்திற்காக விஜய் கூட்டிய கூட்டம்.. தனி பாதையை உருவாக்கும் சூர்யாவை பார்த்து கத்துக்கோங்க
ஹரி இவர் சூர்யாவை வைத்து ஆறு, வேல் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படம் அடுத்தடுத்து இரண்டு பாகங்களாகவும் வெளிவந்தது. மேலும் இவர்களின் கூட்டணியில் அருவா திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் ட்ராப் ஆனது.
கௌதம் வாசுதேவ் மேனன் சூர்யாவுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் தான் காக்க காக்க. அப்படி ஒரு திருப்புமுனையை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனன் வாரணம் ஆயிரம் திரைப்படத்தையும் சூர்யாவை வைத்து இயக்கியிருந்தார். இப்படி வெற்றி கூட்டணியாக இருந்த இவர்கள் துருவ நட்சத்திரம், சென்னையில் ஒரு மழைக்காலம் திரைப்படத்தில் இணைய இருந்தனர். ஆனால் சில கருத்து வேறுபாடால் சூர்யாவால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
Also read: சூர்யா, அதர்வாவின் இடத்தை தட்டிப்பறித்த பாலாவின் அடுத்த ஹீரோ.. விறுவிறுப்பாக தொடங்கும் வணங்கான்