வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தென்னிந்தியா என்றாலே ஐட்டம் பாட்டுதான்.. சர்ச்சையை கிளப்பிய வாரிசு நடிகை

பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தற்போது தென்னிந்திய சினிமாவும் பல நல்ல திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. புதுப்புது டெக்னாலஜிகளை பயன்படுத்தி எங்களாலும் முடியும் என நம்ம ஊரு இயக்குனர்கள் பிரம்மாண்ட திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர்.

அதிலும் இந்த வருடம் வெளியான கே ஜி எஃப் 2, விக்ரம், ஆர்ஆர்ஆர், காந்தாரா உள்ளிட்ட பல திரைப்படங்கள் உலக அளவில் பேசப்பட்டது. இப்படி புகழ்பெற்று வரும் தென்னிந்திய படங்களை அவமதிப்பது போல் பேசி இருக்கும் ராஷ்மிகாவுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள ராஷ்மிகா பாலிவுட் திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

Also read: அவங்க ஒன்னும் கடவுள் இல்ல.. கேமராவை வச்சு பார்த்தார்களா, மீண்டும் எதிர்ப்பை சம்பாதித்த ராஷ்மிகா

கன்னடம், தெலுங்கு என்று பிரபலமான இவருக்கு பாலிவுட் திரைப்படங்களில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இவர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த குட்பை திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. அதை தொடர்ந்து இவர் நடித்திருக்கும் மிஷன் மஞ்சு திரைப்படம் வரும் ஜனவரி 23ம் தேதி வெளியாக இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய ராஷ்மிகா தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா சாங் மற்றும் ஐட்டம் சாங் தான் அதிக அளவில் வருகிறது. மெலடி மற்றும் ரொமான்டிக் பாடல்கள் அதிகமாக வருவதில்லை. ஆனால் இந்தி திரைப்படங்களில் அப்படிப்பட்ட பாடல்கள் அதிகமாக இருக்கிறது.

Also read: தூக்கி விட்டவர்களுக்கு செய்த துரோகம், ராஷ்மிகா படங்களில் நடிக்க தடை.. மேலும் அதிர்ச்சி கொடுத்த ரிஷப் ஷெட்டி

மேலும் மிஷன் மஞ்சு திரைப்படத்தில் அனைவரையும் கவரும் வகையில் அப்படிப்பட்ட ஒரு ரொமாண்டிக் பாடல் இருக்கிறது. அது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் அதை கேட்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த சர்ச்சையான பேச்சு தான் தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமாகி ஹிந்தி திரை உலகுக்கு சென்று விட்டு இப்போது தன்னை தூக்கி விட்ட திரையுலகை ராஷ்மிகா அவமதித்துள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் பாலிவுட்டுக்கு சப்போர்ட் செய்து பேசினால் தான் அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் என்பதற்காக இவர் பேசியுள்ளதாகவும் ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.

Also read: கரகாட்டக்காரன் கோவை சரளாவிற்கு அடுத்தபடி நீங்கதான்.. பங்கமாக கலாய்த்ததால் நொந்து நூடுல்ஸ் ஆன ராஷ்மிகா

Trending News