விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வாரிசு. இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு வாரிசு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்போதே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி வாரிசு படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியில் வாரிசு படத்தை விட தளபதி 67 படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
Also Read : வெளிநாடுகளில் வசூல் வேட்டையாடிய விஜய்.. ரிலீசுக்கு முன்பே துணிவை விட 2 மடங்கு கல்லா கட்டிய வாரிசு
இதே கூட்டணியில் மீண்டும் படம் அமைவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இதற்கு பூஜை போட்ட நிலையில் ஜனவரி இரண்டாம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது. எப்போதுமே லோகேஷ் கனகராஜ் தனது படத்திற்கு அறிவிப்பை ஒரு வீடியோவுடன் வெளியிடுவார்.
அதேபோல் தளபதி 67 படத்திற்கும் ப்ரோமோ வீடியோ வெளியிட லோகேஷ் முடிவு செய்துள்ளார். ஆனால் அந்த வீடியோவை வெளியிடக் கூடாது என லோகேஷிடம் தில் ராஜு கேட்டுக் கொண்டுள்ளாராம். இதனால் வாரிசு படத்தின் பிசினஸ் குறைந்துவிடும் என்று தில் ராஜு கூறியுள்ளார்.
Also Read : தில் ராஜூ உடன் இணையும் 100 கோடி வசூல் நடிகர்.. வாரிசு விஜய்க்கு பின் போட்ட அடுத்த ஸ்கெட்ச்
லோகேஷ் கனகராஜ் வேறு வழியில்லாமல் வாரிசு படம் வெளியான பின்பு தளபதி 67 படத்திற்கான ப்ரோமோவை வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே தில் ராஜு தமிழ் சினிமாவில் விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்று சர்ச்சையை கிளப்பினார்.
இதனால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே பூதாகர பிரச்சனை வெடித்தது. அதற்கும் விஜய் மௌனம் காத்து வந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் அடுத்த படத்திற்கும் தில் ராஜூ செக் வைத்த நிலையில் கண்டும் காணாமல் உள்ளார். இதனால் தில் ராஜூவும் ஓவராக ஆடுகிறார் என கூறப்படுகிறது.
Also Read : நம்பர் ஒன் இடத்துக்கு ஆசைப்பட்டா மட்டும் போதாது.. விஜய் ரஜினியிடம் கற்றுக்கொள்ளவேண்டிய அந்த ஒரு பழக்கம்.!