சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நடிகைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதாவது சில நடிகைகளின் போட்டோக்களை மார்பிங் செய்து தவறாக பயன்படுத்துவதையே ஒரு கூட்டம் வாடிக்கையாக வைத்திருக்கிறது. அப்படி மார்பிங் செய்யப்பட்ட வீடியோவால் பாதிக்கப்பட்ட ஒரு நடிகை இன்று வரை குடும்பத்துடன் சேர முடியாமல் தவித்து வருகிறார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் அந்த நடிகைக்கு பெரிய திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. ஒன்று இரண்டு படங்களில் நடித்து வந்தா இந்த நடிகை காமெடி நடிகருக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்தார். அனைவராலும் ரசிக்கப்பட்ட அந்த கேரக்டர் இப்போது வரை அந்த நடிகையின் அடையாளமாகவே மாறி இருக்கிறது. அதன் பிறகு அவருக்கு வந்த வாய்ப்புகளும் ஐட்டம் கதாபாத்திரமாக இருக்கவே நடிகை ஒட்டுமொத்தமாக சினிமாவை ஒதுக்கிவிட்டு சின்னத்திரையே கதி என சரணடைந்தார்.
Also read: சொதப்பிய சினிமா என்ட்ரி.. மீண்டும் பழைய ரூட்டுக்கு திரும்பிய பப்லி நடிகை
அப்போது கை மேல் பலனாக நடிகைக்கு அந்த பெரிய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதை நன்றாக பயன்படுத்திக் கொண்ட நடிகை இப்போது சின்னத்திரையின் பிரபல சேனலில் வரும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி அவருடைய கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்தாலும் சொந்த வாழ்க்கையில் நடிகை சொல்ல முடியாத அளவுக்கு சங்கடங்களை சந்தித்து வருகிறாராம்.
அதாவது சில வருடங்களுக்கு முன்பு நடிகையின் பலான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. இதைப் பார்த்த நடிகையின் குடும்பத்தினர் அவரை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் மனம் தளராத நடிகை படாத பாடு பட்டு அந்த வீடியோ ஒரு மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று குடும்பத்தினர் முன் நிரூபித்திருக்கிறார்.
Also read: மாஸ் ஹீரோவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்த 22 வயது நடிகை.. அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு
ஆனாலும் அவரை குடும்பத்தை விட்டு அவர்கள் அனைவரும் ஒதுக்கி வைத்து விட்டார்களாம். இத்தனைக்கும் நடிகையின் அப்பா, சகோதரர் என அனைவரும் சினிமா துறையில் இருப்பவர்கள் தான். ஆனாலும் அந்த வீடியோவை வைத்து அவரை அவர்கள் ஒட்டுமொத்தமாக தலைமுழுகி இருக்கின்றனர். இதனால் நொந்து போன நடிகை காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார்.
ஆனால் அங்கும் அவர் ஏமாற்றப்பட்டு பல பிரச்சினைகளை சந்தித்தாராம். இப்போது ஒட்டுமொத்தமாக அந்த வாழ்வை எல்லாம் ஓரம் கட்டி விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை தன் குடும்பத்தை நினைத்து ஏங்காத நாட்களே கிடையாது. அந்த சம்பவத்திலிருந்து இப்போது வரை தன்னால் மீண்டு வர முடியவில்லை என்று நடிகை தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டு புலம்பி வருகிறாராம்.
Also read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுத்த நடிகை.. கடுப்பில் இயக்குனர் கொடுத்த கேவலமான பதில்