பேய் படத்தில் நடிக்க போகும் ராஜா ராணி 2 வில்லி.. முதல் படத்திலேயே அரசியல் வாரிசுடன் இணையும் அதிர்ஷ்டம்

தனியார் தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்க வேண்டுமென பல பேர் லைனில் நின்று வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி வாய்ப்பு கிடைத்து நடித்து வரும் சீரியல் நடிகைகள் பலரும் சமீபகாலமாக படங்களில் வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்திவிட்டு சீரியலை விட்டே விலகி சென்று விடுகிறார்கள்.

உதாரணமாக நடிகைகள் ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகள் சீரியலில் நடித்துவிட்டு பின்னர் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இவர்களை பார்த்து பின்னால் வந்த நடிகைகளும், படங்களில் வாய்ப்பு கிடைக்க சமூக வலைத்தளங்களில் ஆட்டம், பாட்டம் கவர்ச்சி புகைப்படங்கள், விடியோக்கள் என அனைத்தையும் வெளியிட்டு ட்ரெண்டும் ஆகி விடுவார்கள்.

அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஒருவர் தீடீரென சீரியலை விட்டு விலகி, தற்போது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் திகிலுடன் வெளியான படம் தான் டீமாண்ட்டி காலனி.

வெறும் 2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 17 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்தது. டிமான்ட்டி  காலனியில் திருடப்பட்ட நகையை ஆசைப்பட்டு கொண்டு வந்த இளைஞரால் கடைசியில் அந்த நகைக்கு சொந்தமான பேயிடம் சிக்கிக்கொண்டு எப்படி அவர்கள் மூவரும் தப்பித்து வெளி வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. ஒரு அறையில் மட்டுமே நடக்கும் இப்படத்தின் கதை திரையரங்குகளில் பார்த்த ஒவ்வொருவரையும் அச்சத்தில் உறைய வைத்தது எனலாம்.

இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தாண்டு படமாக உருவாக்கலாம் என இயக்குனர் அஜய் ஞானமுத்து, அருள்நிதி கூட்டணியில் மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தில் அருள்நிதிக்கு தங்கையாக ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த வி.ஜெ.அர்ச்சனா நடிக்க கமிட்டாகியுள்ளார். இவர் அண்மையில் அந்த சீரியலை விட்டு விலகியதையடுத்து திருமணம் செய்துகொள்ள போகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறார் என்ற புரளிகள் கிளம்பியது.

ஆனால் யாரும் ரதிர்பார்காத வகையில் படத்தில் நடிக்க போகிறார் வி.ஜெ.அர்ச்சனா. ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக களமிறங்கிய இவருக்கு தங்கச்சி ரோல் எப்படி செட்டாகும் என்பதை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஒருவேளை இப்படத்தில் அவர் பேயாக நடிப்பதற்கான வாய்ப்புக் கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.