சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ஜீவா தன்னை நிரூபித்து ஜெயித்த 6 படங்கள்.. சமீபத்தில் ஆட்டிப்படைக்கும் கெட்ட நேரம்

நடிகர் ஜீவா நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய நடிப்பில் வெளியான 6 திரைப்படங்கள் அவருக்கு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. ஆனால் சமீப காலமாக அவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுவது இல்லை. இதனால் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற போராட்டத்தில் அவர் இருக்கிறார். அந்த வகையில் ஜீவா தன்னை நிரூபித்து ஐந்து திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

ராம்: அமீர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ஜீவா மன நோயாளியாக கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில், மகன்-தாய்க்கும் இடையே இருக்கும் உன்னதமான அன்பை வெளிக்காட்டி இருப்பார் இந்தப் படத்தில் ஜீவாவின் நடிப்பு பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது. ஜீவாவிற்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருப்பார்.

Also Read: தியேட்டரில் கதறவிட்ட ஜீவாவின் 5 மோசமான படங்கள்.. அட்வான்ஸ் கூட வேண்டாம் என தெரிந்த ஓடும் தயாரிப்பாளர்

: 2006 ஆம் ஆண்டு ஜீவா, பசுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படம், மருத்துவத் தொழிலில் இருக்கும் ஊழல்களை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது. அதிலும் ஏழைகளின் உடல் உறுப்பை திருடும் மருத்துவரின் முகத்திரையை கிழித்து, அவருக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்கும் போராளியாக ஜீவா, இதில் தனது அல்டிமேட் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

கற்றது தமிழ்: ராம் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ஜீவா, அஞ்சலி நடிப்பில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரிய அளவு வெற்றியை பெறாவிட்டாலும், சிறந்த விமர்சனங்களை பெற்றதுடன், சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாக்கிய தமிழ் படம் என்கின்ற பெயரை பெற்றது. இதில் ஜீவா தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார் .

Also Read: அப்பாவுக்கு போட்டியாக களமிறங்கிய ஜீவா.. சின்ன கல்லை போட்டு பெத்த லாபம் பார்க்க போட்ட பிளான்

சிவா மனசுல சக்தி: 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ஜீவாவின் சினிமா கிரியருக்கு திறப்பு முறையாக அமைந்தது. இந்த படத்தில் ஜீவா பக்கா லோக்கல் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இதில் சந்தானத்துடன் அமைந்த காமெடிகள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் ‘மாமா ஒரு குவாட்டர் சொல்லு’ என்ற டயலாக் இளசுகளின் ஃபேமஸ் டயலாக் ஆகவே மாறியது.

கோ: 2011 ஆம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல் அமீர் நடிப்பில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஜீவா ஒரு புகைப்படம் கலைஞர் மற்றும் ஊடகவியலாளராக நடித்திருப்பார். இதில் துரோகத்தை ஜீவா எப்படி ஜீரணிக்கிறார், அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலம் எதார்த்தமாக வெளிக்காட்டி இருப்பார்.

Also Read: 2022ல் அதிர்ஷ்டம் இல்லாமல் போன ஒரே நடிகை.. தொடர்ந்து 4 படம் தோல்வி தளபதியுடன் நடித்தும் வொர்க் அவுட் ஆகல

என்றென்றும் புன்னகை: கௌதம் ஸ்ரீதர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் ரசிகர்களிடம் பாசிட்டிவ்வான விமர்சனத்தை பெற்றது இதில் ஜீவா உடன் த்ரிஷா வினய் சந்தானம் நாசர் ஆண்ட்ரியா உள்ளிட்டோ நடித்திருப்பார்கள் மேலும் ஜீவா வினை சந்தானம் மூவரும் நண்பர்களாக அடிக்கும் லூட்டி படத்தை பார்ப்போரை கலகலப்பாகியது.

இவ்வாறு இந்த 6 படங்கள்தான் ஜீவா தன்னை நிரூபித்து ஜெயித்து காட்டிய படங்களாகும். அதிலும் இந்தப் படங்களின் மூலம் கொடி கட்டி பறக்க நினைத்த ஜீவாவிற்கு கெட்ட நேரமாக இருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

- Advertisement -spot_img

Trending News