கடனில் தத்தளித்த நடிகரை முதலாளியாக ஆக்கிய ரஜினி.. தலைவரை சாமியாக கும்பிட்ட சம்பவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் எளிமையான வாழ்க்கை முறையில் வாழ்ந்தவர். இதனால் பழசை மறக்காமல் தன்னுடன் பயணித்த பலருக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் தனக்கு சரியான நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னை வளர்த்து விட்டவர்களுக்கும் ரஜினி நன்றி கடனை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தன்னுடன் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்த ஒரு நடிகர் கடனில் தவித்துள்ளார். அப்போது ரஜினியை வைத்து படம் தயாரித்தால் இந்த பிரச்சனையில் இருந்து மீளலாம் என்ற முடிவை எடுத்துள்ளார். ஆனால் ரஜினி அப்போது பல படங்களில் பிசியாக இருந்ததால் அவருடைய படங்களை தயாரிக்க முடியவில்லை.

ஆனாலும் ரஜினி வேறு விதமாக அவருக்கு உதவி உள்ளார். அதாவது எம்ஜிஆர் காலத்திலிருந்து பல படங்களில் நடித்து வந்தவர் வி கே ராமசாமி. இவர் பல படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை தயாரித்தும் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விட்டார். அந்த சமயத்தில் தான் ரஜினியை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டார்.

ஆனால் ரஜினி வேறு விதமாக அவருக்கு உதவி உள்ளார். அதாவது கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்தை சூப்பர் ஸ்டார் தயாரித்தார். அப்போது விகே ராமசாமி அழைத்து நான் இப்போது ஒரு படத்தை தயாரிக்கிறேன் அதில் வரும் லாபத்தை சில பேருக்கு தர விரும்புகிறேன்.

அதில் உங்களையும் சேர்த்துக் கொள்ள விரும்புவது ஆகவும், அதற்கான அனுமதியையும் கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த படத்தில் உங்களுக்கு ஒரு சிறப்பு கதாபாத்திரமும் இருக்கும் என்று கூறியுள்ளார். அதேபோல் அருணாச்சலம் படத்தில் நடித்து அதற்கான ஒரு பங்கையும், மேலும் படத்திற்கு கிடைத்த லாபத்தையும் விகே ராமசாமி இடம் ரஜினி கொடுத்துள்ளார்.

இவ்வாறு கடனில் தத்தளித்து வந்த விகே ராமசாமியை முதலாளி ஆக்கி அழகு பார்த்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதற்கு நன்றிக்கடனாக விகே ராமசாமி தனது பூஜை அறையில் ரஜினியின் புகைப்படத்தை வைத்து சாமி போல் தினமும் வணங்கி வந்தாராம். இவ்வாறு யாருக்கும் தெரியாமல் பல பேருக்கு ரஜினி உதவி செய்துள்ளார்.