சேது பட வாய்ப்பை நடிக்க மறுத்த ஹீரோக்கள்.. ஓகே என்று தில்லாக ஒத்துக் கொண்ட கியூட் ஹீரோவின் அப்பா

கியூட்னஸ் ஹீரோக்களை அவர்களுக்கே அடையாளம் தெரியாத அளவிற்க்கு திரையில் காண்பித்து இந்திய சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பாலா. இவர் இயக்கத்தில் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.

அதிலும் பாலாவின் சேது படமானது “இருட்டிண்ட ஆத்துமா” என்னும் சிறுகதையின் பதிப்பை கொண்டு வெளியான திரைப்படம் ஆகும். இவர் சேது படத்திற்காக 90 காலகட்டத்திலேயே நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறார் என்றே சொல்லலாம். படத்தின் கதையைக் கேட்கும் நிறைய ஹீரோக்கள் அதற்கு ஓகே சொல்லியும் மொட்டை போடுவதா என்று இயக்குனர் பாலாவிற்கு வாய்ப்பளிக்காமல் தட்டி கழித்துள்ளனர்.

Also Read: பணத்தாசையால் மொத்தத்தையும் இழந்த காமெடி நடிகர்.. அமீர், பாலாவால் கிடைத்த வாழ்க்கையை பறிகொடுத்த சோகம்

காலம் கனிந்து வரும் என்பதற்கு ஏற்றார் போல பாலாவின் கதை முரளிக்கு மிகவும் பிடித்துப் போக கண்டிப்பாக நான் நடித்து தருகிறேன். இந்த கதையை வேற யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்றும் எப்பொழுது மொட்டை அடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நான் தயாராக உள்ளேன் என்று பாலாவின் திறமைக்கு வாய்ப்பு அளித்தவர் தான் நடிகர் அதர்வாவின் அப்பா முரளி. அப்பொழுது அந்தப் படத்தின் பெயர் “அகிலன்” என்று முடிவு செய்து வைத்துள்ளனர்.

முரளி வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்ததால் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வெகு தூரத்தில் சென்றது. பின்னர் ஏனோ சில காரணங்களால் பாலாவின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்ன கதையில் நடிகர் முரளி நடிக்க முடியாமல் போனது. பிறகு இப்படம் 1999 ஆம் ஆண்டு “சேது” என்னும் பெயரில் நடிகர் விக்ரம், அபிதா, சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த ஒரு காதல் திரைப்படமாக அமைந்தது.

Also Read: பாலா நிலைமை நமக்கும் வந்திடக் கூடாது.. வாடிவாசல் கூட்டணி பிளவா? பதறிய தயாரிப்பாளர், சூர்யா

இதில் சியான் விக்ரம் சேது என்னும் கதாபாத்திரத்தில் கல்லூரியில் கேங்ஸ்டர் இன் தலைவராக நடித்திருப்பார். கல்லூரியில் பயில வரும் அபிதாவை பிடித்துப் போக பலமுறை தனது காதலை வெளிப்படுத்தி இருப்பார். ஒரு வித பயத்துடனே காணப்படும் அபிதாவை ஒரு கட்டத்தில் கடத்தி சென்று தன்னை காதலிக்கும் படி வற்புறுத்துகிறார். அப்பொழுது தனது எதிரிகளுடன் ஏற்படும் பிரச்சனையில் பலமாக தாக்கப்பட்டு மனநோயாளியாகவே மாறி விடுகிறார்.

பின்னர் மனநோயிலிருந்து குணமாகி தனது காதலியை கரம் பிடித்தாரா இல்லையா என்பதை மையமாகக் கொண்டு இப்படமானது அமைந்துள்ளது. படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மனதை கவர்ந்த பாடல்களாகவே அமைந்தது அதிலும் “கான கருங்குயிலே” பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றதோடு விருதினையும் பெற்றது.

Also Read: 2 கோடிக்கு ஆசைப்பட்ட மொத்தத்தையும் இழந்த வெற்றிமாறன்.. பாலாவை போல் தூக்கி எறிந்த சூர்யா