வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வாரிசு ட்ரெய்லரில் மறைக்கப்பட்ட 5 சீக்ரெட் கதாபாத்திரங்கள்.. ரகசியமாக வைத்திருக்கும் பட குழு

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் இதுவரை ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த விஜய் இந்த படத்தில் சென்டிமென்ட், ரொமான்ஸ் என அனைத்திலும் கலக்கி இருக்கிறார்.

இவ்வாறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தில் நமக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் வகையில் ஐந்து கேரக்டர்கள் இருக்கிறதாம். அதை பட குழு ரிலீஸ் நாள் வரை பரம ரகசியமாக வைத்திருக்கிறது. அந்த வகையில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கும் ஐந்து பிரபலங்களை பற்றி இங்கு காண்போம்.

Also read: விஜயை வளர்த்த பிரபலத்தை ஒதுக்கிய எஸ்.ஏ.சி.. கேட்காமல் உதவி செய்த ரஜினி.!

எஸ் ஜே சூர்யா ஒரு இயக்குனராக தன்னை நிரூபித்திருக்கும் இவர் இப்போது ரொம்பவும் பிசியான நடிகராக மாறி இருக்கிறார். அந்த வகையில் இவர் வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். ஏற்கனவே இவர் விஜய்யுடன் இணைந்து மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் இந்த படத்தில் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குஷ்பூ அரசியல், தயாரிப்பு, நடிப்பு என பிசியாக இருக்கும் குஷ்பூ இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் வாரிசு படத்தில் நான் நடிக்கவே இல்லை என்று ஒரு முறை இவர் பத்திரிக்கையாளர் முன்பு தெரிவித்து இருந்தார். ஏனென்றால் இவருடைய கதாபாத்திரம் ரொம்பவும் சஸ்பென்ஸ் ஆக இருக்க வேண்டும் என்பதற்காகவே பட குழு இப்போது வரை இந்த விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறது.

Also read: போர் கொடி தூக்கும் 4 தெலுங்கு சினிமா குடும்பம்.. விஜய் வளர்ச்சிக்கு ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை

பிரபு தற்போது குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வரும் பிரபு இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது இப்போது வரை சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. நிச்சயம் ரசிகர்கள் எதிர்பாராத வகையில் இவருடைய கேரக்டர் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சதீஷ் விஜய்யுடன் பைரவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கூட பங்கேற்று இருந்தார். ஆனால் இவர் இந்த படத்தில் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. அந்த வகையில் சதீஷின் கேரக்டர் என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஜான் விஜய் காமெடி, வில்லன் என ரவுண்டு கட்டி நடித்து வரும் இவர் இந்த படத்தில் இருக்கிறார் என்பதே ஆச்சரியம் தான். அந்த வகையில் இவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற ஆவல் அனைவருக்கும் எழுந்துள்ளது. இப்படி இந்த ஐந்து பிரபலங்களின் கதாபாத்திரங்களையும் வாரிசு பட குழு டிரைலரில் கூட காட்டாமல் கவனமாக தவிர்த்து விட்டது. இதுவே படத்திற்கான எதிர்பார்ப்பையும் உண்டு பண்ணியுள்ளது.

Also read: 6 முறை விஜய், அஜித் பொங்கலுக்கு மோதிக்கொண்ட படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?

Trending News