புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த் விமர்சனத்திற்கு ஒரு கோடி சம்பளமா? அலறிய துணிவு வட்டாரம்

இந்த வருட பொங்கலை மேலும் குதூகலப்படுத்த சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் அஜித், விஜய்யின் துணிவு மற்றும் வாரிசு வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் தங்களது மாஸ் ஹீரோக்களை திரையில் காண்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சென்சார் போர்டின் நிலவரப்படி துணிவு படத்தின் டிரைலர் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகி சுமார் 44 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது. ஆனால் வாரிசு ட்ரெய்லரானது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போனது. இதனால் அஜித்தின் துணிவு தான் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இந்த வருட பொங்கலை கொண்டாட போகிறது போல் தெரிகிறது.

Also Read : நெகட்டிவ் விமர்சனங்களுக்கு வேற லெவல் பதிலடி கொடுத்த அஜித்.. துணிவு பிரிவியூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

இதில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒரு நாள் முன்பின் வெளியாக இருந்த நிலையில் தற்பொழுது இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. அதிலும் வாரிசை பின்னுக்குத் தள்ளி அஜித்தின் துணிவானது அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் நாங்கள் தான் கெத்து என்று ஓவராக பீத்திக் கொண்டு வருகின்றனர். அதிலும் அதற்கு ஏற்றார் போல படத்தின் சிறப்பு காட்சி நேரம் கூட ஒதுக்கப்பட்டு விட்டது.

தற்பொழுது அஜித்தின் துணிவானது அதிகாலை 1 மணிக்கு, வாரிசானது அதிகாலை 4 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் வாரிசு ட்ரெய்லரில் மண்ணைக் கவ்வியதால் படக்குழுவிற்கு மேலும் அடி மேல் அடி விழுந்தது போல் கலக்கத்தில் உள்ளனர். இதனாலையே படத்தில் போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் வாரிசு படக்குழு இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

Also Read : சென்சாரால் மீண்டும் துணிவுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. வசூலுக்கு வச்ச பெரிய ஆப்பு

இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அனுதினமும் அனைவரிடமும் வசை வாங்கும். ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரிடமும் வாரிசு படக்குழு மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் தங்களின் படத்தின் வெற்றிக்காக இவர்களிடம் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது போல் தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து படம் வெளியாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் துணிவை விட வாரிசு தான் பெஸ்ட் எனவும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்பதைப் போல பாசிட்டிவான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதற்காக ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிரசாந்த் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பயங்கர ட்ரண்ட் ஆகி சென்சார் போர்டில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read : வேகமெடுக்கும் பொங்கல் ரேஸ்.. வாரிசு, துணிவு ப்ரீ பிசினஸ் இன்றைய நிலவரம்

Trending News