திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் நான்கு 2ம் பாகம் படங்கள்.. எதிர்பார்ப்பை எகிறவிட்ட வடசென்னை

சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு எதுவும் பெறவில்லை. இப்போது தனுஷ் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. அதில் நான்கு படங்கள் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

புதுப்பேட்டை 2 : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் புதுப்பேட்டை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருவதாக பல வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகிறது.

Also Read : ரொமான்டிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.. 18 வருடங்களுக்குப் பிறகு வரும் ஹிட் படத்தின் 2ம் பாகம்

ஆயிரத்தில் ஒருவன் 2 : செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் வெளியான போது ரசிகர்களின் கவனம் பெறவில்லை என்றாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை கொண்டாடினார்கள். இதன் விளைவாக ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை தனுஷை வைத்து செல்வராகவன் இயக்குகிறார்.

வடசென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. சென்னையில் முக்கிய நகரமான வடசென்னை பகுதியில் பல வருடங்களாக இருக்கும் இருதரப்பிடையே உள்ள பிரச்சனையை வெட்ட வெளிச்சமாக காட்டி இருந்தார் வெற்றிமாறன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Also Read : ஆடுகளம் படத்தில் நடிக்காமல் கோட்டை விட்ட பிரபல நடிகர்.. வாய்ப்பை பயன்படுத்தி 2 விருது வென்ற தனுஷ்

பொல்லாதவன் 2 : இயக்குனர் வெற்றிமாறனின் அறிமுக படம் தான் பொல்லாதவன். இந்த படத்தில் சாதாரண இளைஞனாக இருக்கும் தனுஷ் தன்னுடைய பைக் தொலைந்து போனதால் அதில் என்னென்ன பிரச்சனை சந்திக்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் நல்ல வசூலை வாரி குவித்த நிலையில் இரண்டாம் பாகம் எடுக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

Also Read : சம்பாதிக்கும் ஆசையில் கடனாளியான 5 நடிகர்கள்.. 45 கோடிகளுக்கு கப்பம் கட்டிய தனுஷ்

Trending News