வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சர்க்கரை பொங்கலாக இனிக்கும் துணிவு.. அஜித்தை கொண்டாடும் ஆடியன்ஸ், முக்கியமான 5 காரணங்கள்

ஒட்டுமொத்த திரையுலகமும் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வாரிசு, துணிவு திரைப்படங்கள் இன்று வெளியாகி இருக்கிறது. எதிர்பார்த்தபடியே இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித் படம் இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டு வருவது பட குழுவினரை குஷிப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் துணிவு திரைப்படத்தை ஆடியன்ஸ் எதற்காக இவ்வளவு ரசிக்கிறார்கள் என்பதற்கான சில காரணங்களை பற்றி இங்கு விரிவாக காண்போம். முதலில் படத்தின் கதைதான் பலரையும் ரசிக்கவும், பாராட்டவும் வைத்திருக்கிறிருக்கிறது. ஏற்கனவே வெளிவந்து சக்கை போடு போட்ட மணி ஹெய்ஸ்ட் கதையின் ஒன் லைன் தான் துணிவு படத்தின் கதை.

Also read: அழுத்தமான மெசேஜ் சொல்லும் மாஸ் ஹீரோ அஜித்.. சரவெடியாக வெளிவந்த துணிவு எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அந்த கதை கருவை மையப்படுத்தி வங்கிகளின் அட்டூழியங்களை அழுத்தமாக காட்டி இருக்கிறது இந்த துணிவு. அந்த வகையில் கதைக்கேற்றவாறு அஜித்தின் நடிப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. வில்லத்தனம் கலந்த அவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் மைக்கேல் ஜாக்சன் டான்ஸ், அனல் பறக்கும் சண்டை காட்சிகள், சேசிங் என படம் முழுவதையும் அவர் தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து திரை கதையின் வேகமும் ரசிகர்களை பிரமிக்க வைக்கிறது. இப்பொழுது தானே படம் ஆரம்பித்தது அதற்குள் இடைவேளையா என்று நினைக்கும் அளவுக்கு முதல் பாதி முழுவதும் பரபர காட்சிகளாக ரசிகர்களை மிரட்டி இருக்கிறது. அதேபோன்று இந்த படத்தில் அஜித்தின் லுக்கும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது.

Also read: அஜித் மிரட்டும் ஒன் மேன் ஷோ.. துணிவு எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

இதற்கு முன்பு அவரை பலரும் உருவ கேலி செய்து கிண்டல் அடித்தது நினைவு இருக்கலாம். ஆனால் அது அனைத்திற்கும் ஒரு பதிலடியாக அவர் இப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும் தெறிக்க விட்டிருக்கிறார். அந்த வகையில் அஜித்தின் ஒன் மேன் ஷோவாக இப்படம் இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக மஞ்சு வாரியர், சமுத்திரகனி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் படத்தில் தேவையில்லாத விஷயங்களை தவிர்த்து இருப்பதும் பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அதிலும் பிளாஷ்பேக் காட்சியை ஜவ்வு போல் இழுக்காமல் கச்சிதமாக முடித்திருப்பது பாராட்ட வைத்திருக்கிறது. இப்படி ரசிகர்கள் அசந்து போகும் அளவுக்கு இருக்கும் இந்த துணிவு திரைப்படம் இப்போது கலெக்சனிலும் மாஸ் காட்டி வருகிறது.

Also read: வாரிசு, துணிவு படங்கள் எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் விமர்சனம் கூறிய பயில்வான்

Trending News