வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

களை கட்டும் பொங்கல் ரிலீஸ்.. அசர வைக்கும் துணிவு முதல் நாள் வசூல்

பொங்கலுக்கு இன்னும் மூன்று தினங்கள் இருந்தாலும் இப்பவே பொங்கல் ஆர்ப்பாட்டம் களை கட்டி விட்டது. இதற்கு முக்கிய காரணம் இரு பெரும் நடிகர்களின் படங்கள் இன்று நேருக்கு நேர் மோதி இருப்பது தான். அந்த வகையில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் துணிவு திரைப்படத்திற்கு தான் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டிரைலர் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது படம் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் இன்று முதல் காட்சியில் ஆரம்பித்த ரசிகர்களின் ஆரவாரம் இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Also read: சர்க்கரை பொங்கலாக இனிக்கும் துணிவு.. அஜித்தை கொண்டாடும் ஆடியன்ஸ், முக்கியமான 5 காரணங்கள்

அந்த வகையில் துணிவு திரைப்படம் தற்போது வசூலிலும் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே துணிவு படத்தின் பிரீ புக்கிங் பலரையும் வியக்க வைத்திருந்தது அதாவது இந்த படத்தின் ஆன்லைன் புக்கிங் மட்டுமே கிட்டதட்ட 13 கோடி வரை வசூலித்திருந்தது. அதிலும் தமிழ்நாட்டில் இந்த படத்தின் ஆன்லைன் புக்கிங் 10 கோடி வசூல் ஆனது.

அதை தொடர்ந்து தற்போது படத்திற்கு எதிர்பாராத அளவு வரவேற்பு கிடைத்திருப்பதும் பக்க பலமாக அமைந்துள்ளது. இதை பார்க்கும் போது இனிவரும் நாட்களிலும் இந்த வரவேற்பு அதிகரிக்கும் என்று தெரிகிறது. அதிலும் வாரிசு திரைப்படம் தான் மாஸ் காட்டும் என்று பட குழு ஓவர் அலப்பறை கொடுத்து வந்த நிலையில் தற்போது துணிவு அது அனைத்தையும் சைலன்டாக அடித்து நொறுக்கி இருக்கிறது.

Also read: அழுத்தமான மெசேஜ் சொல்லும் மாஸ் ஹீரோ அஜித்.. சரவெடியாக வெளிவந்த துணிவு எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அந்த வகையில் துணிவு முதல் நாள் மட்டுமே 25 முதல் 30 கோடி வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாட்டிலும் துணிவு திரைப்படம் வேற லெவலில் பிரமோஷன் செய்யப்பட்டிருந்தது. அதன் காரணமாக தற்போது உலகம் முழுவதும் துணிவு படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

அதிலும் வார நாளான இன்று படத்தின் ஓப்பனிங் கலெக்சன் எதிர்பார்த்ததுக்கும் மேலாகவே வந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பொங்கல் விடுமுறையும் வர இருக்கிறது. அதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் இந்த வசூல் வேட்டை இனிவரும் அடுத்தடுத்த நாட்களில் பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: அஜித் மிரட்டும் ஒன் மேன் ஷோ.. துணிவு எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

Trending News