பொதுவாக தளபதி விஜய் சுற்றி எப்போதுமே அரசியல் நகர்வுகள் இருந்து வருகிறது. விஜய்யின் படங்களில் பெரும்பாலும் அரசியல் வசனங்கள் இடம் பெறும். அதுமட்டுமின்றி அவரது படங்களின் ஆடியோ லான்ச் பங்க்ஷனிலும் அரசியல் சம்பந்தமான விஷயங்களை பகிர்ந்து கொள்வார்.
அதுமட்டுமின்றி விஜய்யின் சர்கார், கத்தி போன்ற படங்களில் நிறைய அரசியல் கட்சியை தாக்கும்படியான வசனங்கள் இடம் பெற்றது. இதனால் இந்த படங்களை வெளியிடுவதிலேயே மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் விஜய் வாரிசு படத்தை தொடங்கியதில் இருந்தே அவருக்கு அரசியல் கட்சிகளில் இருந்து நெருக்கடி வந்தது.
அதாவது விஜய்யின் வீடு மற்றும் நிறுவனங்களில் ஐடி ரைட் நடந்தது. அதுமட்டுமின்றி விஜய்யின் காருக்கு வரி செலுத்தவில்லை என்ற பிரச்சனையும் ஏற்பட்டது. இதெல்லாம் ஒரு வழியாக முடிய வாரிசு படம் ரிலீஸ் செய்யவே சிக்கல் ஏற்பட்டது. இப்போது ஆளுங்கட்சசியாக இருக்கும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் துணிவு படத்தை கைப்பற்றியது.
இதனால் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இப்போது வாரிசு படத்தில் 5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் என்று இடம்பெற்ற அரசியல் வசனம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது சமீபத்தில் சட்டசபையில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே சில கருத்து வேறுபாடு நிலவியது.
இதனால் ஆளுநர் சட்டசபையை புறக்கணித்து விட்டு சென்றுவிட்டார். ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள கட்சியினர் வாரிசு படத்தின் ட்ரெண்டிங் டயலாக்காண 5 நிமிடத்தில் ஆட்சியேமாறும் என்ற ஹேஷ்டேக்கை திமுகவுக்கு எதிராக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் வாரிசில் அரசியல் வசனங்கள் இடம் பெறுவதற்கான காரணம் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார்.
ஏற்கனவே விஜய் தனது ரசிகர் மன்றத்தை கூட்டி அரசியல் சம்பந்தமான விஷயங்களை பேசி உள்ளார். இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியானது. இப்போது வாரிசு படத்திலும் அரசியல் பேசியுள்ளதால் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரவுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.