செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அழகே பொறாமைப்படும் பேரழகி.. 31 வயது நடிகை 2 மாத கர்ப்பத்தோடு உயிரிழந்த பரிதாபம்

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை பலரையும் தன்னுடைய நடிப்பால் ஆச்சரியப்படுத்தியவர் தான் அந்த நடிகை. பேரழகு பெட்டகமாக அழகே பொறாமைப்படும் அளவுக்கு இருக்கும் அவரை பலருக்கும் பிடிக்கும் சாந்தமான முகம், அமைதியான பேச்சு என்று தன்னுடைய வேலையை மட்டும் பார்த்து வரும் அவருக்கு சினிமா துறையில் எப்போதுமே ஒரு தனி மரியாதை இருந்ததுண்டு.

அந்த வகையில் பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் இந்த தேவதை இப்போது அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 20 வயதில் தன் திரை பயணத்தை ஆரம்பித்த அந்த நடிகை 31 வயதிலேயே உயிரிழந்தது இன்று வரை திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

Also Read: வாய்ப்புகள் குறைய குறைய ஆடையும் குறைந்தது.. வாரிசு நடிகையின் ஓவர் அட்ராசிட்டி

இந்த இடைப்பட்ட காலங்களில் அந்த நடிகை ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் அவருடைய நூறாவது திரைப்படம் தான் அவர் உயிருடன் இருக்கும் போது வெளியான கடைசி திரைப்படமாக அவருக்கு அமைந்துவிட்டது. அதாவது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய உடன்பிறப்புக்காக தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட்டார்.

அதுவே அவருக்கு எமனாகவும் முடிந்துவிட்டது. அவருக்கு மட்டுமல்ல அவர் ஆசையாக கனவு கண்ட ஒரு உயிரும் அதனால் உலகை காணாமலேயே போய்விட்டது. ஆம் அந்த நடிகை இறக்கும் போது இரண்டு மாத கருவை சுமந்து கொண்டிருந்தார். இது குறித்து அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் மிகவும் ஆசையாக பேசுவாராம்.

Also Read: வரலட்சுமி பூஜை செய்துவிட்டு வாங்கிய விவாகரத்து.. பிரிய முடியாமல் மீண்டும் சேர்ந்த ஜோடி

ஆனால் அது அனைத்தும் கனவாக போய்விட்டது தான் பரிதாபம். இருந்தாலும் அந்த நடிகை இப்போதும் திரையுலகில் ஒரு மறக்க முடியாத நட்சத்திரமாக இருக்கிறார். மேலும் நடிகை இறந்த பிறகு அவருடைய நடிப்பில் வெளியான ஒரு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அது மட்டுமல்லாமல் சிறந்த நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது.

மேலும் அவருடைய இறந்த தினத்தில் சிறந்த நடிகைக்கான விருதும் வருடம் தோறும் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த நடிகை இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் எத்தனையோ திறமையான நடிகைகள் நம்மை விட்டு சென்றாலும் இந்த நடிகையின் மரணம் இன்னும் கூட ஒரு பாதிப்பை ஏற்படுத்தி வருவதை நம்மால் மறுக்க முடியாது.

Also Read: கர்ப்பமா இருக்கும் போது ஆட வச்சி அழகு பார்த்த டாப் நடிகர்.. 14 ஆண்டுகள் கழித்து வெளியான சீக்ரெட்

Trending News