வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

எழிலால் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்ட பாக்யா.. நடுரோட்டுக்கு வந்த குடும்பம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்கு பிறகு முடங்கிப் போய் மூலையில் உட்கார்ந்து விடுவார் என பாக்யாவை நினைத்த பலருக்கும் அவர் தற்போது பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராதிகா போலவே பாக்யாவும் மாடனாக மாறுவதற்கு பார்லர் சென்று, தன்னுடைய லுக்கை மாற்றி இருக்கிறார்.

இதுமட்டுமின்றி அவ்வப்போது குடைச்சல் கொடுக்கும் கோபிக்கும் பாக்யா சரியான பதிலடிம் கொடுக்கிறார். இப்போது எழிலால் பாக்யாவிற்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. ‘சும்மா கிடந்த சங்க ஊதி கெடுப்பான ஆண்டி’ என்ற மாதிரி கோபி பெயரில் இருக்கும் வீட்டில், அவருடைய பெயர் கொண்ட பலகையை மாற்றிவிட்டு அதில் பாக்யாவின் பெயரை எழில் வைத்தார்.

Also Read: விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

இதை பார்த்ததும் காண்டான கோபி, பாக்யா உள்ளிட்டோரை வெளுத்து வாங்குகிறார். அதன் பின் இரண்டு மாதங்களாக போட்ட சபதத்திற்காக ஒழுங்காக பணத்தை கொடுத்த பாக்யா அடுத்தடுத்த மாதங்களில் கொடுக்கவில்லை என்றும் கோபி வசை பாடுகிறார். இதன் பின் ஒரு லட்சத்தை இப்பவே அக்கவுண்டில் போட்டு விடுவதாகவும் பாக்யா சொல்ல, காசு கொடுத்தாலும் இந்த வீட்டை உனக்கு கொடுக்க மாட்டேன் என்று கோபி ஒற்றை காலில் நிற்கிறார்.

இதன் பின் ராதிகாவிடம் சென்று கலந்துரையாடிய கோபி, தற்போது குடும்பத்தை நடுரோட்டில் நிற்க வைக்கும் முடிவை எடுத்திருக்கிறார். இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணம் பாக்யா தான் என ஈஸ்வரியும் வசை பாடுகிறார். இதன்பின் மறுபடியும் வீட்டுக்கு வந்த கோபி வீட்டில் நடக்கும் எந்த விஷயமும் எனக்கு பிடிக்கவில்லை.

Also Read: விவாகரத்தான 5 போட்டியாளர்களை பொறுக்கி எடுத்த விஜய் டிவி.. டிஆர்பிக்காக இப்படியல்லாமா பண்ணுவீங்க!

இந்த வீட்டில் இருக்கும் யாரும் என்னை புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் யாரும் என் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் இந்த வீட்டை விற்றுவிடும் முடிவிற்கு வந்து விட்டேன் என்று குடும்பத்தினரின் தலையில் இடியை இறக்கினார் கோபி. இதைக்கேட்ட வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.

இந்த பிரச்சனைக்கெல்லாம் எழில்தான் காரணம். ஏனென்றால் அவர் மட்டும் கோபியின் பெயர் பலகையை மாற்றாவிட்டால் இவ்வளவு தூரம் கோபி கோபப்பட்டு இருக்க மாட்டார். மறுபுறம் எழிலுக்கு, தன்னுடைய அம்மாவை விட்டுவிட்டு அப்பா ராதிகாவுடன் ஜோடி போட்டுக் கொண்டு வளைகாப்பிற்கு வந்தது தான் மனம் வலித்து விட்டது.

Also Read: சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

அதனால் தான் வீட்டின் முன் மாட்டி வைத்திருந்த கோபியின் பெயர் பலகையை விட்டு எறிந்தார். இருப்பினும் பாக்யா மற்றும் அவருடைய இரண்டு மகன்களும் எப்படியாவது இந்த வீட்டை கோபியிடம் விலைக்கு வாங்கி விடுவார்கள். இதன்பின் கோபியின் ஆட்டம் செல்லுபடி ஆகாது. இப்படி ஜவ்வாய் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Trending News