புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

3 படங்களை இயக்கிய எம்.ஜி.ஆர். 200 நாட்களை கடந்த உலகம் சுற்றும் வாலிபன்

எம்.ஜி.ஆர் என்ற பெயர் சொன்னாலே தமிழ் சினிமா முதல் அரசியல் வரை அறிந்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கு திரையுலகம் தான் அவரை அரசியலுக்கு அழைத்து வர உறுதுணையாக இருந்தது. அவர் நடித்த பல படங்களில் அவரது ஸ்டைல், வசனம், நடனம், என ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர். இப்படி எம்.ஜி ஆர் பல படங்களில் நடித்தாலும் அவரே இயக்கி நடித்த 3 படங்கள் பிரபலமானது. அப்படிப்பட்ட படங்களை குறித்து பார்க்கலாம்.

Also Read: எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு முன்பே சாதனை படைத்த நாயகன்.. தொழில்நுட்பம் இல்லாமலேயே இரட்டை வேடத்தில் நடித்த சுவாரஸ்யம்

நாடோடி மன்னன்: 1958 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல் முதலில் இயக்குநராக அறிமுகமாகி எடுத்த படம் தான் நாடோடி மன்னன். இரட்டை வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட படம் எனலாம். இப்படத்தின் வெற்றிவிழாவில் மட்டும் 2 லட்சம் ரசிகர்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் கலந்துகொண்டு எம்.ஜி ஆரை காண கூட்டம் கரைபுரண்டது. 100 நாட்களை கடந்து ஓடிய இப்படம் 1 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தது.

உலகம் சுற்றும் வாலிபன்: எம்.ஜி.ஆர் இயக்கி, தயாரித்து, நடித்த இப்படம் 1973 ஆம் ஆண்டு வெளியானது. 200 நாட்களுக்கு மேல் கடந்து திரையரங்குகளில் ஓடிய இத்திரைப்படத்தில் முருகன்,ராஜு என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஹாங் காங், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.

Also Read: முதல் முறையாக கோடியில் வசூல் சாதனை படைத்த 2 படங்கள்.. எம்.ஜி.ஆர், சிவாஜியை போற்றும் திரை உலகம்.!

மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்: 1978 ஆம் ஆண்டு எம்.ஜி ஆர் கடைசியாக நடித்து,இயக்கி திரைப்படம் தான் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் . இப்படத்தின் ரிலீஸுக்கு பின்பு தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று மக்களுக்கு சேவைகளை செய்ய ஆரம்பித்தார். எழுத்தாளர் அகிலனின் கயல்விழி என்ற நாடக தொகுப்பின் ஒரு பாகமாக மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் கதை எழுதப்பட்டிருக்கும். இதனை மையமாக வைத்தே இப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வெற்றிப் பெற்றது.

Also Read: எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கயிருந்த கமலஹாசன்.! ஆனால் யாரால் இப்படம் கைவிடப்பட்டது. அவரே கூறிய பதில்

- Advertisement -

Trending News