இப்போதெல்லாம் பிரபலமாக இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டு வருகிறார்கள். இப்படி எத்தனையோ பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு ரசிகர்களிடம் புத்தகமாக சென்றடைந்திருக்கிறது. அப்படித்தான் உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் ரஜினியும் தன்னுடைய வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பதை பற்றி ஒரு புத்தகமாக எழுத ஆசைப்பட்டிருக்கிறார்.
ஆனால் அதற்காக மூன்று முறை முயற்சி எடுத்தும் ரஜினி அதை வேண்டாம் என்று தள்ளிப் போட்டு இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருக்கு இருந்த பயமும், பதட்டமும் தான். அதாவது ரஜினி ஆரம்ப காலத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வந்திருக்கிறார். ஒருமுறை ரஜினி லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டி ஒருவர் மீது மோதினார் என்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அதை அடுத்து ஏர்போட்டில் ஒருவரை குடிபோதையில் கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டார். இது எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய சில நடவடிக்கைகளை பார்த்த பலரும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதாக விமர்சனம் செய்தனர். அது மட்டுமல்லாமல் அவர் மீது ஏகப்பட்ட பழி போட்டு அசிங்கப்படுத்தினார்கள். மேலும் ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கை கூட சர்ச்சையானது.
அதாவது அவர் மூன்று முறை காதல் தோல்வி அடைந்திருக்கிறார். மேலும் திருமணத்திற்கு பிறகு கூட அவர் ஒரு நடிகையின் மீது ஆசைப்பட்டதாக கூட அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையில் எத்தனையோ சர்ச்சைகளும் பிரச்சனைகளும் இப்போதும் கூட தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இதையெல்லாம் புத்தகமாக எழுத ஆசைப்பட்ட ரஜினி அதை எழுதியும் இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் எழுதியது அனைத்தையும் அவர் கோபமாக கிழித்து போட்டு இருக்கிறார். இது ஒரு முறை அல்ல மூன்று முறை நடந்திருக்கிறது. ஏனென்றால் அவரால் தன்னுடைய உண்மையான வாழ்க்கை வரலாற்றை எழுத முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம் இந்த வாழ்க்கை வரலாறை எழுதினால் பல பேருடைய உண்மையான முகம் தெரியவரும். அது அனைவருக்கும் சங்கடத்தை கொடுக்கும் என்பதால் அவர் அதை எழுதாமல் தன் மனதிலேயே வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நல்ல மனிதராக இருப்பதால்தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார்.