சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பாக்ஸ் ஆபிஸை திணறடித்த 5ம் நாள் மொத்த வசூல்.. தொடர் விடுமுறையில் அடித்து நொறுக்கும் வாரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பக்கா குடும்ப செண்டிமெண்ட் படமாக வெளியான வாரிசு திரைப்படத்தின் 5-ம் நாள் வசூல் விபரம் தற்போது வெளியாகியிருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது.

வாரிசு திரைப்படம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் ஹிந்திலும் அடுத்தடுத்து வெளியானது. அதிலும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மீண்டும் வாரிசு படத்தின் கலெக்ஷன் வேகம் எடுத்து இருக்கிறது. ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதத்தில் உருவாகியுள்ள வாரிசு படம் வெளியான 11-ம் தேதி அன்று தமிழகத்தில் 23 கோடியை குவித்தது.

Also Read: வாரிசு, துணிவு எது வெற்றி வாகை சூடியது.. ரெட் ஜெயிண்ட் ரிப்போர்ட்

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் 50 கோடியை வாரிசு கலெக்ஷன் செய்தது. இந்தப் படம் வெளியான பிறகு சோசியல் மீடியாவில் நெகட்டிவ் கமெண்ட்கள் குவித்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத தளபதி ரசிகர்கள் படத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் நல்ல வரவேற்பை கொடுத்து அவர்களுக்கு மூஞ்சியில் கரியை பூசினார்கள்.

அதிலும் முதல் நாளில் வாரிசு தமிழகத்தில் மட்டும் 19.43 கோடியை வசூலித்ததை தொடர்ந்து இரண்டாவது நாளில் 8.75 கோடியையும், மூன்றாவது நாளில் 7.11 கோடியையும், நான்காவது நாளில் 7.24 கோடியையும் ஒட்டுமொத்தமாக நாட்களில் மட்டும் 42.53 கோடியை வசூல் செய்திருக்கிறது இதைத்தொடர்ந்து 5-ம் நாளில் மட்டும் உலகம் முழுவதும் வாரிசு படம் 32 கோடியை அசால்டாக வசூல் செய்திருக்கிறது.

Also Read: யார் நம்பர் ஒன்.. பரபரப்பான வசூல் விவரத்தை வெளியிட்ட சென்னை தியேட்டர்

இதன் காரணமாக வாரிசு திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் 119.35 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்திருக்கிறது. இது மட்டுமின்றி இன்னும் பொங்கல் விடுமுறை மீதம் இருப்பதால் வசூலில் வாரிசு மேலும் அதகளம் செய்யப் போகிறது.

அதுமட்டுமின்றி தெலுங்கு வெர்ஷன் ஆக வாரிசுடு, ஹிந்தி டப்பிங்கிலும் வாரிசு திரைப்படம் செம்மையாக ஸ்கோர் செய்து வருகிறது. இதனால் இந்த வார இறுதிக்குள் தளபதியின் வாரிசு நிச்சயம் 200 கோடியை அசால்டாக தட்டி தூக்கி விடும்.

Also Read: இனி ஒரு உயிர் போகக்கூடாது, ஆட்டமெல்லாம் வாரிசு துணிவோடு முடிஞ்சு.. அஜித், விஜய் எடுத்த அதிரடி முடிவு

- Advertisement -spot_img

Trending News