திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இயக்குனர் மிஷ்கினால் விஜய்க்கு ஏற்பட்ட தலைவலி.. செம அப்செட்டில் லோகேஷ்

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் தமிழகம் எங்கும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நடிகர் விஜய் தன்னுடைய அடுத்த கட்ட பணிகளை தொடங்கிவிட்டார். அவரின் 67 ஆவது படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாகி இருக்கிறார் தளபதி.

நடிகர் விஜய்க்கு ஏற்கனவே மாஸ் வெற்றியை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தன்னுடைய 67 வது படத்தில் இணைகிறார். விஜய்க்கு இந்த படம் மிகவும் முக்கியமான படம் என்றே சொல்லலாம். ஏனென்றால் சமீபத்திய ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது.

Also Read: தளபதி 67ன் அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்.. சுடச்சுட அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஸ்கின்

இயக்குனர் லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை கதையிலோ, படம் சம்பந்தப்பட்ட வேறு எந்த விஷயத்திலும் சொதப்ப மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். ஆனால் தற்போது இந்த படத்தின் வேலைகளை மொத்தமாக சொதப்பி கொண்டிருப்பது இயக்குனர் மிஷ்கின் தான்.

தளபதி 67 அதிரடி ஆக்சன் திரைப்படமாக அமைவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். பொதுவாக ஒரு படம் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது அது சம்பந்தமாக எந்த விஷயமும் வெளிவரக் கூடாது என்பதில் படக்குழு ரொம்பவும் கண்டிப்புடன் இருக்கும். சம்பந்தப்பட்ட நடிகர்களிடமும் இதைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்லிவிடுவார்கள்.

Also Read: கொஞ்சம் கூட நாகரிகம், அறிவே இல்லாத மிஸ்கின்.. மேடையில் பேச கூட தகுதி இல்ல

ஆனால் இயக்குனர் மிஷ்கினோ ஏகத்துக்கும் படம் சம்பந்தப்பட்ட காட்சிகளை பொது மேடைகளில் பேசி வருகிறார். இப்படியே இவர் எல்லாத்தையும் சொல்லிக் கொண்டே போனால் படத்தின் சுவாரசியம் குறைந்து விடும் என்பதால் நடிகர் விஜய் மிஷ்கினின் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். மிஷ்கினை படத்திலிருந்து நீக்க கூட விஜய் சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இயக்குனர் மிஷ்கினை வைத்து படம் சம்பந்தப்பட்ட பல காட்சிகளை எடுத்துவிட்டதால் அவரை நீக்குவது என்பது முடியாத காரியம். இதனால் மிஷ்கினை ஏன் நடிக்க வைத்தோம் என்று பயங்கர அப்செட்டில் இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விரைவில் மிஷ்கினை ஒரு கண்ட்ரோலில் நடிகர் விஜய்யும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது.

Also Read: அனைத்து இயக்குனர்களும் கேவலமாக பேசும் மிஸ்கின்.. தற்போது ஒரு இயக்குனரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.!

Trending News