புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

8 வருஷத்தில் விஜய் சேதுபதியே பிரமித்து போன விஷயம்.. மனுஷன் திறந்த புத்தகமா இருக்காரு!

கடின உழைப்பு மட்டும் இருந்தால் கண்டிப்பாக வாழ்க்கை மாறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விஜய் சேதுபதி உள்ளார். அதாவது ஆரம்பத்தில் கும்பலோடு கும்பலாக கண்ணுக்கே தெரியாத அளவுக்கு திரையில் இருப்பார். ஆனால் அதன் பின்பு தன்னைத் தானே செதுக்கி கொண்டு டாப் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றார்.

அதுமட்டுமின்றி ஒரு கதாநாயகன் அந்தஸ்துடன் இருக்க வேண்டும் என்று எப்போதுமே விஜய் சேதுபதி நினைத்ததில்லை. தன்னை தேடி வரும் கதாபாத்திரம் தனக்கு பிடித்திருந்தால் வில்லனாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு கனகச்சிதமாக நடித்து வருகிறார். இப்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டிலும் விஜய் சேதுபதி கைவசம் எக்கச்சக்க படங்கள் உள்ளது.

Also Read : கேரியரின் உச்சத்தில் இருக்கும் 2 நடிகைகள்.. விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுக்கும் ஹீரோயின்ஸ்

விஜய் சேதுபதியின் நடிப்பை காட்டிலும் அவருடைய பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால் பொது மேடைகளில் எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாக பேசக்கூடியவர். ஒரு திறந்த புத்தகமாக தனது கடந்த காலங்கள் பற்றி எல்லா விஷயங்களையும் பகிர்ந்து உள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி பேசிய வீடியோ அவரது ரசிகர்களால் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அதாவது 2008இல் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் சென்று கொண்டிருக்கும்போது ஒரு காரைப் பார்த்த ஆசிரியப்பட்டுள்ளார். உடனே தனது மனைவியிடம் இது என்ன கார், எவ்வளவு விலை என்று விஜய் சேதுபதி கேட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி இந்த காரின் பெயர் ஸ்கோடா, கிட்டத்தட்ட 20 இருந்து 25 லட்சம் இருக்கும் என கூறியுள்ளார்.

Also Read : ரஜினி, அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதி.. பெரிய சம்பவத்துக்கு அடிபோடும் மக்கள் செல்வன்

இதைக் கேட்டு விஜய் சேதுபதி ஆச்சரியப்பட்டாராம். ஏன் ஒரு 5, 6 லட்சம் மதிப்புடைய காரில் இவர்கள் போக மாட்டார்களா என்று கேட்டேன். ஆனால் அதிலிருந்து ஒரு 8 வருடம் கழித்து நானே ஒன்றரை கோடிக்கு கார் வாங்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று விஜய் சேதுபதி வெளிப்படையாக அந்த பேட்டியில் பேசுகின்றார்.

பொதுவாக பெரிய அந்தஸ்து வந்தவுடன் பலர் பலசை மறந்து விடுவார்கள். ஆனால் விஜய் சேதுபதி ஒரு முன்னணி ஹீரோவாக இருக்கும்போது கடந்த காலத்தில் தான் ஆசைப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார். இந்த இயல்பின் காரணமாக தான் தற்போது வரை விஜய் சேதுபதியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Also Read : விடுதலை முடித்த கையோடு விஜய் சேதுபதியின் செயல்.. மீண்டும் சரியா போகும் மார்க்கெட்

Trending News