புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அங்க விரட்டியடிக்கப்பட்ட தில் ராஜு.. வாரிசை தொடர்ந்து 3 கோலிவுட் ஹீரோக்களுக்கு போட்ட ஸ்கெட்ச்

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு, தமிழ் சினிமாவிற்கு வாரிசு படத்தின் மூலம் விஜய்யின் புகழைப் பாடிக்கொண்டு உள்ளே நுழைந்தார். இவர் கோலிவுட் பக்கம் திரும்பியதற்கு என்ன காரணம் என்பது தற்போது தான் தெரிந்திருக்கிறது.

அதேபோல் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கும் விஜய்யை தொடர்ந்து மூன்று தமிழ் டாப் ஹீரோக்களுக்கு ஸ்கெட்ச் போட்டு இருக்கிறார். வாரிசு படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் இந்த படத்திற்கு பிறகு இதில் தில் ராஜுவின் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பிரம்மாண்டமாக துவங்கப் போகிறது.

Also Read: தமிழ்நாட்டில் துணிவை நெருங்க கூட முடியாத வாரிசு.. அதுக்குன்னு 30% பின்தங்கி அவலம்

இதற்குப் பிறகு தனுஷின் ஒரு படத்தையும் தில் ராஜு எடுக்கப் போகிறார். தனுஷ் ஏற்கனவே தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவரை வைத்தும் பெரிய பட்ஜெட் படத்தை எடுக்க தில் ராஜு ப்ளான் போட்டு இருக்கிறார்.

இதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் ஒரு படத்தையும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இவர் இனிமேல் தமிழ் சினிமாவில் முழு கவனம் செலுத்த போகிறாராம்.

Also Read: மகேஷ்பாபுவை அட்ட காப்பியடித்த விஜய்.. வம்சியை இங்க மட்டும் இல்ல அங்கயும் வச்சு செய்றாங்களாம்

காரணம் ஆந்திராவில் முக்கிய பெரிய ஹீரோக்கள் பிரபாஸ், மகேஷ்பாபு, சிரஞ்சீவி என இன்னும் நிறைய கதாநாயகர்களுடன் பிரச்சனையில் இருக்கிறார் தில் ராஜ். அவர் யாரிடமும் கால்சூட் வாங்கி படம் பண்ண முடியாது என நிலை வந்ததால் விஜய்யை வைத்து உள்ளே புகுந்து இப்போது இனிமேல் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிறைய படங்களை எடுக்கப் போகிறாராம்.

ஆனால் விஜய் தான் நம்பர் ஒன் என இங்கு சொல்லிவிட்டு இனிமேல் தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தெலுங்கில் ரிலீஸ் ஆன விஜய்யின் வாரிசுடு படத்திற்கும் ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்தது.

Also Read: சொந்த ஊரில் சோடைப்போன தில் ராஜு.. வாரிசு படத்தால் ஏற்பட்ட அவமானம்

Trending News