செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தளபதியுடன் ரத்த சொந்தமாக போகும் பிக் பாஸ் பிரபலம்.. வாயை பிளக்க வைத்த அசுர வளர்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி அன்று சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடிய அஜித் மற்றும் விஜய் இவர்களது துணிவு, வாரிசு படமானது வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் விஜயின் வாரிசு படமானது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.210 கோடி வரை வசூலை வாரி குவித்ததோடு மட்டுமல்லாமல் சென்டிமென்டாக வந்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளது.

தற்பொழுது வம்சி இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு படத்தை விடவும் இவர் அடுத்ததாக நடிக்கப் போகும் தளபதி 67 படத்தின் அடுத்தடுத்து நடக்கக்கூடிய அப்டேட்களை அறிவதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் ரஷீத்  ஷெட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Also Read: ராஜமௌலி, ரிஷப் ஷெட்டி பார்த்து கத்துக்கோங்க.. விக்ரம், சுகாசினியை வறுத்தெடுக்கும் திரையுலகம்

இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், அர்ஜுன் சார்ஜா மற்றும் மன்சூர் அலிகான் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். அதிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் உடன் த்ரிஷா ஜோடி போட உள்ளார். இது ரசிகர்களை மேலும் குஷியில் அழுத்தி உள்ளது. இப்படம் கேங்ஸ்டர் கதை அம்சத்தைக் கொண்டு உருவாக உள்ள நிலையில் படத்தில் முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளதால் இது ஒரு பான்-இந்தியா படமாக உருவாக உள்ளது.

இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் லோகேஷ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்” படம் வசூலில் சக்கை போடு போட்டுள்ளதால் தற்பொழுது இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67  படத்திற்கும் எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.

Also Read: இயக்குனர் மிஷ்கினால் விஜய்க்கு ஏற்பட்ட தலைவலி.. செம அப்செட்டில் லோகேஷ்

இதில் படத்தின் சுவாரசியம் என்னவென்றால் இதற்கு முன் இல்லாத அளவிற்கு விஜய் ஒரு புது ரூட்டை கையில் எடுத்துள்ளார். படத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு கதாபாத்திரத்தில் விஜய் இரு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்க  உள்ளார். தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக களம் இறங்கிய ஜனனி இப்படத்தில் விஜய்க்கு ரத்த சொந்தமாக நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர் பிக் பாஸ் வீட்டில் தனது கொஞ்சல் பேச்சின் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 

அதிலும் மிகக் குறுகிய காலத்திலேயே சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரையில் அதுவும் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக்கூடிய தளபதிக்கே ரத்த சொந்தமாக போகும் வாய்ப்பை பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் வாயை பிளக்க வைத்துள்ளது. அதிலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் ஏகே 62 படத்திலும் அஜித் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இரு ஹீரோக்களுமே தங்களது அடுத்த படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Also Read: மீண்டும் இணையும் மெகா கூட்டணி.. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகும் அஜித்

Trending News