வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கதிரவனுக்குப் பின் 13 லட்சம் தட்டி தூக்கிய போட்டியாளர்.. மைனாவிற்கு விழுந்த ஆப்பு

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கதிரவன் 3 லட்சம் மதிப்புள்ள பணமூட்டையை தட்டி சென்றார். இந்நிலையில் பிக் பாஸ் இப்போது பணப்பெட்டியை வைத்துள்ளார். இதை யார் எடுக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அதாவது அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. ஆகையால் இவர்களுள் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அடிக்க உள்ளார். எனவே இவர்கள் மூவரும் தங்கள் மீது உள்ள நம்பிக்கையில் பணப்பெட்டியை எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை.

Also Read : தளபதியுடன் ரத்த சொந்தமாக போகும் பிக் பாஸ் பிரபலம்.. வாயை பிளக்க வைத்த அசுர வளர்ச்சி

மைனா நந்தினி மற்றும் அமுதவாணன் இவர்கள் இருவருக்கும் தான் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஜி.பி முத்து அசீம் தான் வெற்றி பெறுவார் என்று கூறினார். ஆகையால் அமுதவாணன் எப்படியும் பணப்பெட்டியை எடுத்து விட வேண்டும் என மும்மரம் காட்டி வந்தார்.

மேலும் பணமூட்டையை அமுதவாணன் எடுக்க நினைத்த நிலையில் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் கதிரவன் பணமூட்டையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் தற்போது அமுதவாணனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது 13 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை அமுதவாணன் எடுத்துள்ளார்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவர்தான்.. அசீமை வீழ்த்த கடுமையாக போராடும் போட்டியாளர்

கண்டிப்பாக பைனல் லிஸ்ட் ஆக அமுதவாணன் சென்றிருந்தால் இவ்வளவு தொகை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இறுதிவரை சென்று பணப்பெட்டியை சாதுரியமாக தட்டி தூக்கி உள்ளார். கடந்த சீசன்களில் கேபி மற்றும் சிபி ஆகியோர் இதுபோன்று சிறப்பாக விளையாடி இருந்தார்கள்.

அதேபோல் இந்த சீசனில் அமுதவாணன் அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்ததால் இப்போது மைனா நந்தினிக்கு ஆப்பு விழந்துள்ளது. அதாவது பிக் பாஸ் சீசன் 6 பைனல் லிஸ்ட் என்ற பெயருடன் மட்டுமே மைனா நந்தினி வெளியே செல்ல இருக்கிறார்.

Also Read : பண மூட்ட கதிருக்கு பணப்பெட்டி யாருக்கு? மீண்டும் காசு மழை கொட்டும் பிக் பாஸ் வீடு

Trending News