சின்னத்திரையின் TRPயை எகிற வைக்கும் 5 படங்கள்.. தொலைக்காட்சியில் பட்டையை கிளப்பும் ரஜினி படம்

ஒரு சில படங்களை தொலைக்காட்சியில் எப்போது போட்டாலும் மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்தப் படத்தின் மீது அவர்களுக்கு எப்போதுமே சலிப்பு ஏற்படாது. மேலும் குறிப்பிட்ட அந்த படங்களை ஒளிபரப்பினால் அந்த சேனலின் டி ஆர் பி யும் எகிறும் . அப்படி சேனலின் டிஆர்பிஐ ஏற்றும் ஐந்து படங்கள் இருக்கின்றன

விசுவாசம்: 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் நடிகர் அஜித் நடித்த விசுவாசம். ரிலீஸ் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் சின்னத்திரை டி ஆர் பி யில் முதலிடத்தில் இருப்பது இந்தப் படம் தான். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்த இந்தப் படத்தின் டிஆர்பி 18. 14 ஆகும்.

பிச்சைக்காரன்: இயக்குனர் சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் பிச்சைக்காரன். இந்தப் படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து நடித்திருந்தார். ரிலீஸ் ஆகி ஏழு வருடமாகியும் இந்தப் படம் சின்னத்திரையின் டிஆர்பி யில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பிச்சைக்காரன் திரைப்படத்தின் டிஆர்பி 17.60 ஆகும்.

அண்ணாத்தே: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்தே. மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் சின்னத்திரை டிஆர்பி யில் முன்னணியில் இருக்கிறது. அண்ணாத்தே படத்தின் டிஆர்பி 17.37 ஆகும்.

சர்க்கார்: இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் சர்க்கார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ரொம்பவும் வெளிப்படையாகவே அரசியல் பேசியிருப்பார். இருந்தாலும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்திற்கு இன்று வரை சின்னத்திரை ரசிகர்களிடமும் வரவேற்பு இருக்கிறது. சர்க்கார் படத்தின் டிஆர்பி 16.90 ஆகும்.

பொன்னியின் செல்வன்: இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்டமான படைப்புதான் பொன்னியின் செல்வன். இந்தப் படத்திற்கு தியேட்டரில் எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருந்ததோ அதே அளவுக்கு சின்ன திரை ரசிகர்களிடமும் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் சின்னத்திரை டி ஆர் பியில் முன்னணியில் இருக்கிறது. இந்தப் படத்தின் டிஆர்பி 16.38 ஆகும்.