செரினாவிடம் கொச்சையாக பேசிய அசீம்.. டைட்டில் வின்னர் ஆகிவிடக் கூடாது என நடக்கும் சூழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 2 நாட்களில் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை யார் அடிக்கப் போகிறார் என்பது எல்லோருக்குமே தெரியவரும். இந்நிலையில் வெளியில் ரசிகர்கள் மத்தியில் அசீமுக்கு பேராதரவு இருக்கிறது.

ஆனால் பிக் பாஸில் உள்ள போட்டியாளர்களை பொருத்தவரையில் அசீம் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷெரினாவிடம் அசீம் கொச்சையாக பேசியதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இந்த விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது செரினாவிடம் உங்க பாய் பிரண்டை பார்க்கும் வரும்போது காண்டம் எடுத்துட்டு வரமாட்டியா என்று அசீம் கேட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஒரு பெண்ணிடம் இதை எப்படி அசீம் கேட்டார், அவருக்கு விவஸ்த்தையே இல்லையா என்று பலரும் அசீமை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

ஆனால் இது முற்றிலும் வதந்தியே என்று கூறப்படுகிறது. அதாவது சமீபகாலமாக சமூக வலைத்தளங்கள் ரசிகர்கள் மத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு படத்தை வெற்றி, தோல்வி அடைய செய்யும் அளவிற்கு பலம் வாய்ந்ததாக மாறி உள்ளது. ஆகையால் ஒருவர் மீது களங்கம் சுமத்தினால் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும்.

இதனால் அசீம் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை பரப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது மக்கள் பெரும் அளவில் அசீமை ஆதரிப்பதால், பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டம் இவருக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தரப்பு கூறப்படுகிறது. அது நடக்கக்கூடாது என்பதற்காக சூழ்ச்சி நடந்துள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள் இப்போது பெரிதும் அசீமுக்கு தங்களது ஆதரவை கொடுத்து வருகிறார்கள். இதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விக்ரமன், அசீம், ஷிவின் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடந்த சீசன்களை விட இந்த சீசனில் தற்போது வரை யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதை கணிக்க முடியாமல் உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →