1. Home
  2. எவர்கிரீன்

விஜய்க்காக கொலை செய்யும் அளவிற்கு எஸ்ஏசி-க்கு வந்த கோபம்.. பிரபல நிறுவனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம்.!

விஜய்க்காக கொலை செய்யும் அளவிற்கு எஸ்ஏசி-க்கு வந்த கோபம்.. பிரபல நிறுவனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம்.!
விஜய்க்காக கொலை செய்யும் அளவிற்கு எஸ்ஏசி-க்கு வந்த கோபம்

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் 90களில் முன்னணி இயக்குனராக இருந்தவர். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மேலும் அந்த காலத்தில் இவரை புரட்சி இயக்குனர் என்று தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு சமூக சிந்தனையுடன் படம் எடுக்கக் கூடியவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் நடித்த நடிகை சோபாவைத்தான் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இன்றைய தலைமுறைகளுக்கு தளபதி விஜய்யின் அப்பாவாக மட்டுமே தெரிந்த சந்திர சேகர் தான், நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு இருட்டறை போன்ற மெகா ஹிட் படங்களின் இயக்குனர்.

ஆரம்ப காலங்களில் விஜய் சினிமாவில் நடிப்பது என்பது சந்திரசேகருக்கு பிடிக்கவே இல்லை. விஜய் சினிமாவுக்குள் வருவதை தவித்தும் வந்தார். ஆனால் சினிமாவின் மீதான விஜய்யின் ஆர்வத்தை புரிந்து கொண்ட சந்திரசேகர் அதன் பின்னர் தன் ஒரே மகனின் ஆசைக்காக அவர் வளர்ச்சியில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டார்.

நடிகர் விஜய் முதலில் நாளைய தீர்ப்பு என்னும் படத்தில் நடித்தார். இருந்தாலும் விஜயை மக்களிடையே கொண்டு சென்றது செந்தூரப் பாண்டி திரைப்படம் தான். விஜய் சினிமாவுக்கு வந்த புதிதில் வழக்கம்போல அவர் மீது எதிர்மறை விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது.

அதிலும் அப்போது முன்னணி பத்திரிக்கையாக இருந்த குமுதம் ஒரு படி மேலே போய் விஜய்யின் முகம் பார்ப்பதற்கு தேவாங்கு போல் இருக்கிறது என்று விமர்சனம் எழுதி இருக்கிறது. இதனால் சந்திரசேகருக்கு பயங்கரமான கோபம் வந்துவிட்டது. வண்டிகளில் ஆட்களுடன் சென்ற சந்திரசேகர் அந்த பத்திரிக்கை ஆபீஸையே அடித்து நொறுக்கி இருக்கிறார்.

அதிலும் கோபம் தீராத சந்திரசேகர் கொலை செய்யும் அளவிற்கு பயங்கர கோபத்தில் இருந்திருக்கிறார். அப்போது குமுதம் பத்திரிகையின் எடிட்டராக இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. அவரைத் தாண்டி இந்த விமர்சனம் வெளிவந்திருக்க முடியாது என்பதால் அவர் மீது கடும் கோபத்தை காட்டியிருக்கிறார் சந்திரசேகர். அதன் பின்னர் எப்படியோ அவரை சமாதானம் செய்திருக்கிறார் சுஜாதா. இவ்வளவு கோபக்காரராக இருந்த சந்திரசேகர் இப்போது ஆன்மீக வழியில் இறங்கி விட்டார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.