வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

50 வயதை கடந்தும் இன்னும் ஹீரோயின் அந்தஸ்தை இழக்காத 5 நடிகைகள்.. ஏங்க விடும் நதியா

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்கள் தொடங்கி இன்றைய தலைமுறை ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் 50 வயதை கடந்தும் இவர்கள் ஹீரோயின் அந்தஸ்தை இழக்காமல் உள்ளனர். வயதிற்கு ஏற்ப தங்களின் அழகினை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டே இருக்கின்றனர். அவ்வாறு உள்ள 5 நடிகைகளை இப்பொழுது பார்க்கலாம். 

நதியா: தமிழில் 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பிரபு, ரஜினி, சத்யராஜ் போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். அதிலும் ரசிகர்களின் கனவு கன்னியாக எல்லா காலகட்டத்திலும் எவர்கிரீன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நதியா. தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

Also Read: பிரபல நடிகருடன் காதலில் விழுந்த நடிகை நதியா.. இது என்ன புது கதையா இருக்கு

சுகன்யா: இவர் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு விஜயகாந்த் உடன் கவர்ச்சியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து துடுக்கான மற்றும் திறமையான கதாபாத்திரங்களிலும் நடிக்க தவறியதே இல்லை. இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் அழகு பதுமையுடன் இருக்கிறார். 

குஷ்பூ: சினிமாவை பொறுத்தவரையில் ஒல்லியாக இருந்தால் மட்டுமே வாய்ப்பு என்ற நிலையை மாற்றி பப்ளிமாஷாக இருந்து சின்னத்தம்பி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். தற்பொழுது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி உள்ளார். இவரது புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பயங்கர ட்ரெண்டானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் குஷ்பூ வா இது என்று வாயைப் பிளக்கின்றன.

Also Read: சந்தேகப்பட்ட கணவர்.. விவாகரத்து செய்துவிட்டு 51 வயதில் தனிமையில் வாடும் சுகன்யா

பானுப்பிரியா: ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்ரியா. இவர் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர். அதனைத் தொடர்ந்து தற்பொழுது கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இன்றளவும் தனது அழகு குறையாமல் ஜொலித்து வருகிறார்.

ரம்யா கிருஷ்ணன்: தனது படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். இவர் நீலாம்பரி ஆக ரஜினிக்கு சமமாக படையப்பா படத்தில் தனது பங்களிப்பை அளித்திருப்பார். சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தில் கூட சிவகாமி தேவி என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இன்றளவும் இளசுகளின் கிரஷ் ஆக இருந்து வருகிறார்.

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் வயசானாலும் தங்களது அழகாலும் துள்ளலான நடிப்பாலும் இன்றளவும் திரையில் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் இன்றைய இளைஞர் பட்டாளங்களின் க்ரஷ் ஆக வலம் வருகிறார் எவர்கிரீன் நடிகை நதியா.

Also Read: ஆரம்ப காலத்தில் நீச்சலுடையில் நடித்துள்ள பானுப்பிரியா.. அப்பவே இவ்வளவு கவர்ச்சியா

Trending News