செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிளாப் இயக்குனருடன் கூட்டணி போடும் விஜய் சேதுபதி.. கடைசி படமே ஓடல, இதுல 4வது வேரையா?

கோலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் அந்த இயக்குனர். காமெடி திரைப்படங்கள் தான் அவருக்கு கைவந்த கலை, இவரது இயக்கத்தில் தற்பொழுது வெளியாகி உள்ள திரைப்படம் காபி வித் காதல். இப்படம் மாபெரும் வெற்றிபடமாக அமையவில்லை என்றாலும் கலகலப்பு இரண்டாம் பாகத்தில் இணைந்த அதே கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளதால் காமெடிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன் சுந்தர் சி-யின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 3 பார்ட்டாக வெளிவந்துள்ளது. இவரது படங்களில் காமெடிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும் பேய் படம் என்ற பெயரில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். சுந்தர் சி தற்பொழுது அரண்மனை-4 படத்தை எடுக்க தயாராக இருக்கிறார் என்பது போல் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Also Read: ரிலீஸ் அன்றே மண்ணை கவ்விய சுந்தர் சி.. பாசிட்டிவ் ரிப்போட்டால் லவ் டுடேக்கு அடித்த லக்

அதிலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் தனது படங்களில் அஸ்தான கதாநாயகர்களாக நடித்து வருபவர்களால் படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்ற எண்ணத்தில் இருக்கிறாராம். ஒரு மாற்றத்திற்காக புது கதாநாயகனான விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார் சுந்தர் சி.

இதனை தொடர்ந்து அசுரத்தனமான நடிப்பின் மூலம் அசுர வளர்ச்சியை கண்டு இருக்கும் விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்துவார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு சமீபத்தில் வெளியான படங்களின் மூலம் சற்று சரிவை சந்தித்துள்ளார்.

Also Read: 8 வருஷத்தில் விஜய் சேதுபதியே பிரமித்து போன விஷயம்.. மனுஷன் திறந்த புத்தகமா இருக்காரு!

தொடர்ந்து ஆக்சன் மற்றும் வில்லத்தனமான நடிப்பின் மூலம் புகழின் உச்சியைத் தொட்ட விஜய் சேதுபதிக்கு. தற்பொழுது காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது போல் தெரிகிறது. இதனால்தான் சுந்தர் சி அடுத்ததாக இயக்கும் அரண்மனை-4 படத்தில் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெளிவந்த அரண்மனை 3-யில் காமெடியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். இதில் 4-வது வேரையா என்று கேட்டு வருகின்றனர். அதிலும் சுந்தர் சி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை. தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் விஜய் சேதுபதிக்கு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவரும் இப்படம் மாற்றத்தை தருமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: சுந்தர் சி-க்கு ஆட்டம் காட்டும் இளம் இயக்குனர்.. 6 மடங்கு அதிகமான வசூலால் ஷாக்கான திரையுலகம்

Trending News