புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சுந்தர் சி இயக்கத்தில் பிளாக் பாஸ்டரான 6 படங்கள்.. பேய்களை டம்மி பீஸ் ஆக்கிய அரண்மனை

தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களில் காமெடியையும் உட்புகுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சுந்தர் சி. அதிலும் அரண்மனை படத்தின் மூலம் பேய்களையே டம்மி பீஸ் ஆக்கி பேய்களுக்கு உண்டான மரியாதையவே கெடுத்துவிட்டார். அதிலும் இவரது இயக்கத்தில் வெளியான 6 பிளாக் பாஸ்டர் திரைப்படங்களை இப்பொழுது பார்க்கலாம்.

முறைமாமன்: 1995 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில் ஜெயராமுடன் குஷ்பூ ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். படத்தில் ஜெயராம் மற்றும் கவுண்டமணியின் கலக்கல் காமெடியானது படம் முழுவதும் நகைச்சுவை உணர்வை கொடுக்கக் கூடிய விதத்தில் அமைந்துள்ளது. மலையாள நடிகரான ஜெயராம் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர்களது  கூட்டணியில் உருவான இப்படம் சூப்பர் ஹிட்டானது. 

Also Read: சுந்தர் சி-க்கு ஆட்டம் காட்டும் இளம் இயக்குனர்.. 6 மடங்கு அதிகமான வசூலால் ஷாக்கான திரையுலகம்

உள்ளத்தை அள்ளித்தா: 1996 ஆம் ஆண்டு நவரச நாயகன் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த வெளியான திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்துள்ளார். கார்த்திக் மற்றும் கவுண்டமணியின் காம்போ ரசிகர்கள் மத்தியில் ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது. இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெறும் வெற்றி பெற்றது.

மேட்டுக்குடி: 1996 ஆம் ஆண்டு என் பிரபாவதி தயாரிப்பில் கார்த்திக், ரம்பா கவுண்டமணி காம்போவில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்துள்ளார். அதிக அளவில் திரையரங்குகளில் திரையிடப்பட்டு 75 நாட்களுக்கு மேல் திரையில் பயணித்து பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.

அருணாச்சலம்: இசையமைப்பாளர் தேவாவின் இசையமைப்பில் 1997 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். படத்தில் 300 கோடியை செலவு செய்தால் 3000 கோடி கிடைக்கும் என்ற கதையினை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியன.

Also Read: 33 வயது நடிகையை ரஜினிக்கு வில்லியாக்கும் நெல்சன்.. 4 ஸ்டேட்டிலும் மாட்டி விடும் சன் பிக்சர்ஸ்

வின்னர்: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பிரசாந்த் வடிவேலு காம்போவில் 2003 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ஆகும். அதிலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரம் இன்றளவும் மீம்ஸ் வடிவில் சமூக வலைதளங்களில் தனக்கான தனி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படம் சூப்பர் ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு பிடித்தமான படங்களின் லிஸ்டில்  ஒன்றாக  உள்ளது.

அரண்மனை: இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் 2014 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படம். ஆக்ரோஷமாக இருக்கக் கூடிய பேய்களை கூட தனது படங்களின் மூலம் ரசிக்க கூடிய விதத்தில் காட்டக்கூடியவர். சுந்தர் சி இப்படத்தில் பெரிய பட்டாளத்துடன் இணைந்து தானே இயக்கி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும்.

இவ்வாறு இந்த 6 படங்களும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த படங்களாகும். அதிலும் அரண்மனை படத்தின் மூலம் பயங்கர கொடூரமான பேய்களையும் டம்மி பீஸ் ஆக்கி பேய்களுக்கான மரியாதையவே  குறைத்துவிட்டார் இயக்குனர் சுந்தர் சி.

Also Read: அடித்துப் பிடித்து அரண்மனை3 படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற சேனல்.. பரிதவித்து நிற்கும் சன் டிவி!

Trending News