சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விக்ரமுக்கு கிடைத்த வாழ்க்கை, வாரிசு நடிகருக்கு கிடைக்கவில்லை.. டீலில் விடப்பட்ட சாக்லேட் பாய்

சினிமாவில் களமிறங்கும் வாரிசு நடிகர்களுக்கு மற்ற நடிகர்களை காட்டிலும் மவுசு அதிகம் தான். உதாரணமாக அவர்கள் நடிக்கும் முதல் படத்திலே அதிக சம்பளம், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பல திரைப்பட நிகழ்ச்சிகளில் முன்னுரிமை என அனைத்தும் உண்டு. ஆனால் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவை கனவு போல் நினைத்து வெற்றிக் கொள்ள ஆசைப்படும் நடிகர்களுக்கு சினிமா ஆரம்பத்தில் பல சிரமங்களையே தரும்.

அப்படி இருந்தும் தங்கள் விடாமுயற்சி மூலமாக சூப்பர்ஸ்டார் முதல் இன்றுவரை பல நடிகர்கள் தனிக்காட்டு ராஜாவாக ரசிகர்கள் மனதில் இடம் பெயர்ந்துள்ளனர். அதில் முக்கியமான நடிகர் தான் விக்ரம், இவரின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை சற்று சறுக்கலாக இருந்தாலும், இவரின் நடிப்பும், ஒரு படத்திற்கு கமிட்டானால் இவர் உடல் வருத்திக்கொண்டு செய்யும் அர்ப்பணிப்பும் வேற லெவல் எனலாம்.

Also Read: ராஜமௌலி, ரிஷப் ஷெட்டி பார்த்து கத்துக்கோங்க.. விக்ரம், சுகாசினியை வறுத்தெடுக்கும் திரையுலகம்

விக்ரமின் ஆரம்பகால பல படங்கள் இவருக்கு தோல்வி கொடுத்தாலும் என்றுமே இவர் மார்க்கெட்டில்லாத நடிகர் என்று சொல்லும் அளவில் இன்றுவரை இல்லை. ஏன் கடந்த சில ஆண்டுகளாக விக்ரம் நடித்து வரும் படங்கள், தொடர் தோல்வியுற்றாலும். மேலும் மேலும் அவரது மார்க்கெட் உயர்ந்துக் கொண்டுதான் போகிறதே தவிர, கொஞ்சம் கூட சறுக்கவில்லை. இந்நிலையில் விக்ரமுடன் பயணித்த மற்றொரு மாஸான வாரிசு நடிகர் சினிமாவில் வாய்ப்புகளை இழந்து திணறி வருகிறார்.

இயக்குனர் மற்றும் நடிகரான தியாகராஜனின் மகனும், நடிகருமான பிரஷாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனக்கென தனி நடன ஸ்டைல், பெண்களை கவரும் முகபாவனை, ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எல்லா அம்சங்களும் கொண்டவர் தான் பிரஷாந்த். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டானது.

Also Read: பழிக்குப் பழி வாங்கிய இயக்குனர்.. இன்று வரை ஜெயிக்க முடியாமல் தவிக்கும் துருவ் விக்ரம்

அதிலும் ஷங்கர் இயக்கத்தில் இவர் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஜீன்ஸ் படம் உலகமெங்கும் பெரும் வசூலை பெற்று வெற்றிப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த சில படங்கள் தோல்வியான நிலையில் மார்க்கெட் இழந்தார். தொடர்ந்து இவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், உடல் எடை அதிகரிப்பு என சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார்.

இப்படி இருக்கும் தருவாயில் விக்ரமின் தோல்வி படங்களை பொருட்டாக நினைக்காத இயக்குனர்கள், பிரசாந்தின் தோல்விப் படங்களை வைத்து அவருக்கு பல இயக்குனர்கள் வாய்ப்புகள் வழங்காததே அவரது சினிமா கேரியர் முடிவுக்கு வந்ததற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தற்போது பிரஷாந்த் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் அந்தாதூண் படத்தில் ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரசாந்தை வளைத்து போட நினைத்த 5 நடிகைகள்.. எவ்வளவு காட்டினாலும் சிட்டாய் பறந்த மம்பட்டியான்

Trending News