திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி-67 ரிலீஸ் தேதியை லாக் செய்த லோகேஷ்.. விஜய்க்கு 2023 பிளாக்பஸ்டர் ஹிட் கன்ஃபார்ம்

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் படம் அதிரபுரி ஹிட் அடித்த நிலையில் தற்போது மீண்டும் இதே கூட்டணி தளபதி 67 படத்தில் இணைந்துள்ளது. லோகேஷ் மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்கிய விக்ரம் படமும் இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் தளபதி 67 படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் படத்தைப் பற்றிய முக்கிய அப்டேட்டுகள் இன்று வெளியாகி உள்ளது. அதாவது வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது.

Also Read : தளபதி 67 கதையை செதுக்கி வைத்திருக்கும் லோகேஷ்.. ஆங்கில பட தழுவலாக இருந்தாலும் வேற லெவல்

தளபதி 67 படத்திற்கான படப்பிடிப்பை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படம் இந்த ஆண்டு 2023 இல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வருகின்ற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தளபதி 67 படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் கலெக்ஷனை அள்ளிவிடலாம் என்ற திட்டத்தில் படக்குழுவினர் உள்ளனர். மேலும் தளபதி 67 படமும் லோகேஷ் எல்சியுவில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. லோகேஷ் தனது முந்தைய படத்தில் உள்ள கதாபாத்திரங்களை அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தி வருகிறார்.

Also Read : லோகேஷ் இதுவரை வசூலில் வேட்டையாடிய 3 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பும் தளபதி 67 ப்ரீசேல் பிசினஸ்

அதேபோல் தளபதி 67 படத்திலும் மாஸ்டர், விக்ரம் படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது. திரிஷா, பிக் பாஸ் ஜனனி, மிஸ்கின், சஞ்சய் தத் கௌதம் மேனன் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் அடுத்த வாரத்தில் டைட்டில் வீடியோ வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் தளபதி மிகுந்த அப்சட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. அதையெல்லாம் தவிடு பொடியாக்கும்படி தளபதி 67 படத்தில் லோகேஷ் தரமான சம்பவம் செய்ய உள்ளார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள்.

Also Read : இரண்டு முறை தேடி போய் வாய்ப்பு கொடுத்த லோகேஷ்.. அசால்டாக தட்டி கழித்த ஹீரோ

Trending News