இப்போதெல்லாம் ஒரு காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்றால் பட குழு எந்த மாதிரியான ரிஸ்கையும் எடுப்பதற்கு தயாராக இருக்கிறது. ஏனென்றால் இப்போதைய ரசிகர்கள் இது போன்ற எதார்த்தத்தை மட்டுமே ரசிக்கிறார்கள். லாஜிக் மீறல் போன்ற எந்த பாட்சாவும் அவர்களிடம் பழிப்பதில்லை. அதனாலேயே தற்போது இயக்குனர்கள் பலரும் ரிஸ்க் எடுத்து காட்சிகளை படமாக்குகிறார்கள்.
அப்படித்தான் பேய் படங்களில் நடித்தே கல்லா கட்டிய நடிகர் ஒரு புது படத்தில் ஆர்வமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு காட்சியை சுடுகாட்டில் படம் பிடிக்க பட குழு முடிவு செய்திருக்கிறது. அதற்காக நிஜ சுடுகாட்டில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறார்கள்.
ஆனால் இது பற்றி அந்த காட்சியில் நடிக்கும் அம்மா நடிகைக்கு யாரும் சொல்லவில்லையாம். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கிரங்கடித்த அந்த நடிகை இப்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவருக்கு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதனால் இரவு நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்திருக்கிறார். காரை விட்டு இறங்கிய அவர் அந்த இடத்தை பார்த்ததுமே அலறி அடித்து மயக்கம் போட்டு இருக்கிறார். இதனால் பயந்து போன பட குழு அவருக்கு தேவையான முதலுதவியை செய்திருக்கிறது. பிறகு கண் முழித்த நடிகை இங்கு நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார்.
ஏனென்றால் நடிகைக்கு இருட்டு, சுடுகாடு போன்றவை எல்லாம் ரொம்ப அலர்ஜியாம். இதனால் நான் இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று அவர் மறுத்திருக்கிறார். அதன் பிறகு அவரை சமாதானம் செய்த பட குழு அன்றைய படப்பிடிப்பையே கேன்சல் செய்து இருக்கிறது. இந்த விஷயம் தான் தற்போது திரையுலகில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.