வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிக் பாஸ் 6 – உறுதியான டைட்டில் வின்னர்.. இணையத்தில் லீக்கான மூன்று பேர் ஓட்டிங்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று ஒளிபரப்பாகிறது. இதனால் யார் வெற்றியாளர்கள் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், இறுதிக்கட்டத்தில் இருக்கும் சிவின், அசீம், விக்ரமன் உள்ளிட்டோருக்கு மக்கள் எவ்வளவு ஓட்டுக்களை அளித்திருக்கின்றனர் என்ற முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

இதை வைத்துப் பார்த்தாலே யார் டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விடுகிறது. ஆனால் இதுவரை நடந்த ஐந்து சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் தான் 3 போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலே மேடையில் நிற்கப் போகின்றனர். இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் கமல் போட்டியாளர்களிடம் அந்த டிராபியை கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.

Also Read: மைனா நந்தினி வாங்கிய சம்பளம்.. இரவோடு இரவாக துரத்தினாலும் லட்சங்களை அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்

அதை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் மூன்று போட்டியாளர்களும் தங்களுக்குள் யாருக்கு இந்த டிராபி கிடைக்கப் போகிறதோ என்று கலக்கத்தில் இருக்கின்றன. ஆனால் தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கும் ஓட்டிங் லிஸ்ட் மூலமாக முன்கூட்டியே யார் வின்னர் என்பது தெரிந்து விட்டது.

சற்றும் எதிர்பாராத வாக்குகளை பிக் பாஸ் ரசிகர்கள் இந்த மூன்று போட்டியாளர்களுக்கு அளித்துள்ளனர். சிவின் 28. 09 கோடி வாக்குகளை பெற்று மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார். பலரும் இவர்தான் டைட்டில் வின்னர் என எதிர்பார்த்த விக்ரமன் வெறும் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

Also Read: நீயா நானா போட்டியில் 2 பிக்பாஸ் போட்டியாளர்கள்.. அசீமுக்கு ரத்த சொந்தம் செய்யும் துரோகம்

விக்ரமனுக்கு மொத்தமாக 35.98 கோடி வாக்குகள் குவிந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராவது மட்டுமல்லாமல் டிராஃபியுடன் 50 லட்சத்தை பெற்று அசீம் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகிறார். அசீமுக்கு மொத்தமாக 36.02 கோடி வாக்குகள் கிடைத்து முதலிடத்தில் உள்ளார்.

மேலும் இந்த சீசனில் கன்டென்ட் கொடுக்கும் கண்டஸ்டண்டாக பார்க்கப்பட்ட அசீம் போட்டியாளர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் ரசிகர்களாலும் விமர்சிக்கப்பட்டாலும், அவரால்தான் பிக் பாஸ் சீசன் 6 சூடு பிடிக்க செய்தவர். ஆகையால் இந்த வெற்றி நியாயம் தான் என்றும் சிலர் ஒத்துக்கொள்கின்றனர்.

Also Read: கடைசி வாரத்தில் துரத்தி விடப்பட்ட போட்டியாளர்.. சாதுரியமாக காய் நகர்த்திய அமுதவாணன்

ஆனால் ஒரு சிலர் விக்ரமன் வெற்றி பெறுவார் என நினைத்ததால் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். இருப்பினும் கோடி கணக்கில் வாக்குகளை பிக் பாஸ் ரசிகர்கள் போட்டியாளர்களுக்கு கொடுத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.

Trending News