புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய் டிவிக்கு டாட்டா காட்டிவிட்டு ஜீ தமிழுக்கு கிளம்பிய பாக்கியலட்சுமியின் முக்கிய பிரபலம்.. இவங்கதானே சீரியலின் ஆணிவேரே

டிஆர்பி-யில் முன்னிலை வகிக்கும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய பிரபலம், தற்போது ஜீ தமிழில் புத்தம் புது சீரியலில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருப்பதால், சீக்கிரம் பாக்கியலட்சுமியில் இருந்து விலகுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்த சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆரியன் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரைத் தொடர்ந்து தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டிக் கொண்டிருக்கும் ரேஷ்மா சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: மைனா நந்தினி வாங்கிய சம்பளம்.. இரவோடு இரவாக துரத்தினாலும் லட்சங்களை அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்

இதுகுறித்து அவரிடம் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் ‘நட்பு, கதை, படப்பிடிப்பில் ஒன்றாக செலவழித்த அழகான மற்றும் கடினமான நாட்கள் மிகவும் பிடித்திருந்தது. மேலும் அனைவரும் விழித்தெழுந்து ஒரு நல்ல நாளை பார்க்கவே விரும்புகிறோம். அது உங்களுக்கு பிடித்தவர்களுடன் இருக்கும்போது மறக்க முடியாததாக இருக்கும்’ என்றும் பதிவிட்டிருந்தார்.

அவருடைய இந்த பதிவை பார்க்கும் போது மறைமுகமாக அவர் சீரியலில் இருந்து விலகுவதை தான் குறிக்கிறது. ஏற்கனவே ராதிகா கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்துக் கொண்டிருந்த நிலையில், அவர் விலகிய பிறகு ரேஷ்மா அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார்.

Also Read: பிக் பாஸ் 6 – உறுதியான டைட்டில் வின்னர்.. இணையத்தில் லீக்கான மூன்று பேர் ஓட்டிங்

இருப்பினும் இந்த கதாபாத்திரம், அப்போபோது மட்டுமே காட்டும் வில்லித்தனத்தை தொடர்ந்து காட்டினால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் சில சமயம் காமெடி பீஸ் ஆகவும் காட்டி விடுவதால் சீரியலின் இயக்குனரே வில்லத்தனத்தை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருக்கிறாரோ என்று, அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்களுக்கு தோன்றி விடுகிறது.

இதனால் அதில் நடிகைகள் நடிக்க தயங்குகின்றனர். இருப்பினும் இவ்வளவு நாள் சவால் நிறைந்த அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்த ரேஷ்மாவிற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவிப்பதுடன், ஜீ தமிழில் புத்தம் புது சீரியலில் வில்லியாக நடிக்கப் போகும் ரேஷ்மாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றன.

Also Read: மட்டமாக வர்ஷினி வழியில் சிக்கப் போகும் எழில்.. அமிர்தாவின் காதலுக்கு வைக்கும் முற்றுபுள்ளி

Trending News