செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரஸ் மீட்டில் பத்திரிகையாளரை தெறிக்க விட்ட RJ பாலாஜி.. நீங்க வேற லெவல் ப்ரோ

நடிகர் ஆர்.ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ரன் பேபி ரன் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஆர்.ஜே பாலாஜி முதன்முறையாக சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன் முறையாக நடித்துள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் விறுவிறுப்புடன் ஒரு கொலையை மையமாக வைத்து நகர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது மேடையேறி பேசிய ஆர்.ஜே பாலாஜியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வேறு வேறு பதிலை சம்மந்தமே தெரிவித்து அந்த இடத்தில் உள்ளோருக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளார்.

Also Read: பாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு லுக்கை மாற்றிய ஆர் ஜே பாலாஜி.. ஒரு பக்கம் தில்லுமுல்லு ரஜினி மாதிரி இருக்காரே

அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி தான் இந்த அப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும், எப்போதும் காலத்துக்கு ஏற்றார் போல் அபிடேட்டாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் பேசினார். மேலும் 15 வயதிலிருந்து 25 வயது வரை உள்ளஇளைஞர்கள் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் அவர்களுக்கு தேவையே இல்லாத விஷயத்தில் அவர்களது எண்ணங்கள் போவதை பார்க்கும்போது தனக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே பத்திரிக்கையாளர்கள் வளைத்து வளைத்து ஆர்.ஜே. பாலாஜியிடம் தங்களது பல கேள்விகளை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தனர். அதில் ஒரு பத்திரிக்கையாளர், கடந்தாண்டு டிசம்பரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிட மக்கள் வசித்து வரும் வேங்கை வயல் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் டேங்கில் மனித கழிவுகளை சில அந்நியர்கள் வீசி சென்றுள்ளனர்.

Also Read: காமெடியை தாண்டி RJ பாலாஜியை தூக்கிவிட்ட 5 படங்கள்.. ஆஹா, இதுல ரெண்டு மூவி இவரே இயக்கியாத

இதை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ந்த நிலையில், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல கட்சியினர் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். இதனிடையே இதுகுறித்து ஆர் ஜே பாலாஜியிடம் கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தனக்கு தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் மிகவும் பிடித்தது என்றும் நேற்றைய கிரிக்கெட் போட்டியில் இரண்டு வீரர்கள் 200 ரன்களை எடுத்தது பற்றியும் சம்மந்தமே இல்லாமல் பதில் கூறினார். அவரது இந்த எதிர்ப்பாராத பதிலுக்கு அரங்கமே சிரித்த நிலையில், என் மாற்றி மாற்றி பதில் கூறுகிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் வினவினர்.

உடனே கொந்தளித்த ஆர்.ஜே.பாலாஜி, நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் என்னிடம் உள்ளது, ஆனால் அதை வெளிப்படுத்தும் மேடை இது இல்லை. நான் நடித்த படத்தை பற்றி மட்டும், இந்த இடத்தில் நீங்கள் கேள்வி கேட்டால் நான் கட்டாயம் பதில் கூறுவதாக தெரிவித்தார். மேலும் தான் சும்மா ஜாலியாக விளையாடினேன், தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.

Also Read:சிம்பு பட வாய்ப்பை தட்டி தூக்கிய RJ பாலாஜி.. புதுசு புதுசா பிரச்சினையை கிளப்புறாங்க!

Trending News