திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பல்லாயிரம் பேர் வேலை இழக்க இதுதான் முக்கிய காரணம்.. அதிர்ச்சியை கிளப்பிய உண்மை நிலவரம்

சமீபத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மைக்ரோசாப்ட், மெட்டா பிளாட்பார்ம்ஸ், ட்விட்டர், அமேசான், டெஸ்லா, போன்ற பெரிய டெக் சேவை நிறுவனங்கள் உடன் தற்போது சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் இணைந்துள்ளது. அதிலும் அமேசான் 18000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

அதைத்தொடர்ந்து ஒரே அறிவிப்பில்  12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருப்பதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்து பெரும் அதிர்ச்சியை அளித்தது. மேலும் அவர் வேலையை இழக்கும் ஊழியர்களுக்கு 6 மாத காலத்திற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் 4 மாத காலத்திற்கான ஊதியத்தையும் வழங்குவதாகவும் அறிவித்தார்.

Also Read: அம்பானி பையனுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.. வைரலாகும் பிரம்மாண்ட நிச்சயதார்த்த புகைப்படங்கள்

இதுமட்டுமின்றி கூகுள் பணி நீக்க அறிவிப்பு மூலம் உலகில் முன்னணி டெக் நிறுவனங்களின் பணி நீக்கம் பட்டியலும் இணைக்கப்படுவதால் ஐடி துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்படி பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்ததற்கு முக்கிய காரணம் என்ன என்பது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிடுவதால் அமெரிக்கா முதல் இந்தியா வரையில் உள்ள அனைத்து ஊழியர்களையும் பாதிக்கும். இதற்கு உலக பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில், அளவுக்கு அதிகமான ஊழியர்கள் பணியில் இருப்பதால், அவர்களை குறைக்கும் நடவடிக்கையாக ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளதாகவும் தகவல் வெளியானது.

Also Read: உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்த போட்டியாளர்.. பல மில்லியன் குழந்தைகளின் வாழ்வாதாரமே இவர்தானாம்

ஆனால் தற்போது உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவந்துள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ட்விட்டர் போன்ற பெரிய நிறுவனங்கள் வேலை ஆட்களை தூக்குவதற்கு வணிக ரீதியாக ஒரு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் இப்பொழுது உலகப் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டி வருகிறது.

அதாவது மனிதர்கள் நினைப்பதை இயந்திரங்கள் மூலமாக செய்து முடிக்கின்றனர். இதனால் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை ஆட்களை தூக்குகின்றனர். இது அறிவியலின் வளர்ச்சியாக பார்க்கப்பட்டாலும் வேலையில்லா திண்டாட்டம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

Also Read: மோசமான அடி வாங்கிய அமேசான், பிளிப்கார்ட்.. அந்தப் புது செயலியால் 2க்கும் வந்த பேராபத்து

Trending News